பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன்சேய் நன்னன் 23. நன்னன், நல்லோர் போற்றும் நற்பண்பு பலபெற்றும் விளங்கினன். நன்னன், பகைவரைப் பாழ்படுக்கும் போற்றலும், அப் பகைவர் அணுகுதற்கும் அஞ்சும் வாளாண்மையும் பெற்றிருந்தான்; விற்போர் வல்லய்ை விளங்கின்ை; இங்கிலவுலகம் கிற்குமளவும், அழியாப் பெரும்புகழ் கின்று கிலைபெறுமாறு, பகைவர் பலரை வன்று புறங்கண்டு, அவர்யால் கவர்ந்து கொண்ட பெறு தற்கரிய போணிகலங்கள் அனைத்தையும், தன்னைப் பாடி வரும் புலவர் முதலாம் இரவலர் தமக்கு வரையாது வழங்கி வள்ளியோனுய் வாழ்ந்தான்; பகற்பொழுதை விளக்கத் தோன்றும் ஞாயிறு, இருளாகிய பகையைக் கடிந்து ஒளி பெற்றுத் திகழ்வதேபோல், நன்னனும், தன் பகைவரை அழித்துப் புகழ் மிகப் பெற்றத் திகழும் பெருஞ் சிறப் புற்ருன்; பகைவர் பெருவாழ்வு வாழப் பார்த்தும் பொறு மையுடையாாதல், போாண்மையுடையாய பேரரசர்க்கு அழகன்று; பகையரசர் தம் பெருவாழ்வுகண்டு பொரு தாரே, பேரரசுடையராதல் கூடும். மேலும், பகைவரொடு மேற்கொள்ளும் முயற்சி, வெற்றி கரு முயற்சியாதலன்றி, வீண்முயற்சியாதல் கூடாது. அதற்கு, அரசராவார், மான மும், மனம்கிறை ஊக்கமும் உடையாதல் வேண்டும்; நல்ல அரசர்மாட்டு கின்று கிலேபெறவேண்டிய இக் நற்பண்புகள் எல்லாம், நன்னன்பால் சிறையப் பொருந்தி யிருந்தன. 'முனைபாழ் படுக்கும் துன்னரும் துப்பின்.” 'வில்ாவில் தடக்கை, மேவரும் பெரும்பூண் நன்னன் சேய் நன்னன்.” 'தொலையா கல்விசை உலகமொடு நிற்பப் பலர் புறங்கண்டு, அவர் அருங்கலம் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரி.” 'பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரும் ஞாயிறு அன்ன அவன் வசையில் சிறப்பு: