பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திரையன் 'கோனச் செருவின் வலம்படு நோன் தாள் மான விறல் வேள்.” (மலைபடு: டுக; சுக-ச; எ0-உ; அச-டு; கசுக-ச) எவ்வினையைத் தொடங்குவதாயினும், தொடங்குவ தற்கு முன்னர்; அவ்வினையைத் தொடங்கின் உண்டாம் அழிவையும், ஆக்கத்தையும், அது முற்றப்பெற்றவழி உண்டாம் பயனேயும் எண்ணிப் பார்த்தே தொடங்குதல் வேண்டும். அவ்வாறு எண்ணுவார் பிழைபடு அறிவுடைய ராயின், அவர்க்கு ஆக்கத்திற்கு மாருகக் கேடே வந்தமம்; ஆதலின், அவர் தெளிந்த அறிவினராதல் வேண்டும்; அத் தகு நல்லறிவை நன்னன் கனிமிகப் பெற்றிருந்தான் எனக் கூறுகிருர் மலைபடுகடாம் பாடிய ஆசிரியர்: 'மதிமாறு ஒரா நன்றுணர் சூழ்ச்சி.” (மலைபடு: சுஉ) கேளாரும் வேட்பமொழிவது வேந்தர்க்கு அழகு என்ப; கன்னே இகழ்வாரும், தன்னே விரும்புமாறு ஒழுக வல்ல ஆற்றல் அரசனுக்கு இன்றியமையாது வேண்டப் படும்; இந் நற்பண்பும் நன்னன் சேய் நன்னன்பால் கின்று நிலைபெற்றிருந்தது. 'இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும்.” (மலைபடு- எங்) தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன் றலின் தோன்ருமை நன்று, செல்வத்துப் பயனே ஈதல்” என்றெல்லாம் கூறுவர் பெரியோர்; நிலைபேறில்லாத செல் வத்தைப் பெற்ருர், அப்பொருளே, அஃது இல்லாமையால், தம்பால் வந்து இரந்து சிற்பார்க்கு வாரிவழங்கி, நிலைபெற்ற புகழைப் பெறுதல் வேண்டும். “அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்ருல் அற்குப ஆங்கே செயல்” என்பது திருக்குறள். அவ்வாறு பெறுவாரே, அறிவுடையருமாவர்; அவ்வாறின்றிப் பேரரசும், பெருஞ் சுற்றமும் பெற்றிருந் தும்,தம்பால் வந்து இரத்தார்க்கு இல்லை எனக்கூறி இழிவு டையாதல் நல்லறிவுடையார் செயலாகாது; அவ்வாறு பிறர்க்கு அளிக்காது பேணிய பொருள்கொண்டு வாழ்வார், இறவாப் பெருநெறி பெற்று, இவ்வுலகில் என்றும் வாழ்வா