பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன்சேய் நன்னன் 25 ால்லர்; அவ்வாறு ஆக்கிய பெரும் பொருளை அறவே கைவிட்டு, அவரும் இறப்பவே செய்வர்; இவ்வாறு இறங் தார், உலகில் எத்தனே எத்தனே கோடியோ! அன்னுரைப் போல், ஆற்றவும் பயன்படாது வாழ்தல் அறநெறி ஆகாது; பொருள் கொடுத்துப் புகழ்பெற்று வாழ்தலே பெரு மையும், பேராண்மையும் ஆகும்; அவ்வறிவு வரப்பெற் ருரே உயர்ந்தோராவர்; அவர் உள்ளமே உயர்ந்த உள்ள மாம்; அவ்வுள்ளம் உடையான் நன்னலும். 'உயர்ந்த கட்டில், உரும்பில் சுற்றத்து அகன்ற காயத்து, அஃகிய துட்பத்து இலம்என மலர்ந்த கைய சாகித் தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் நெடுவரை இழிதரும் நீத்தம்சால் அருவிக் கடுவசற் கலுழிக் கட்கின் சேயாற்று வடுவாழ் எக்கர் மனவினும் பலாே; அதஞல், புகழொடும் கழிகாம் வரைந்த நாள் எனப் பாந்து இடங்கொடுக்கும் விசும்புதோய் உள்ளம்.” (மலைபடு: டுடு -அ) வரையாது வழங்கும் வள்ளன்மையுடையான் நன் னன்; தாம் கூறும் பாராட்டுரைகளாகிய விதைகளை விதைத் துத், தம்மால் புகழப்படுவார் தம் பொருள்களைப் பெற விரும்பும் சொல்லேருழவராம் புலவர் முதலாயிஞர்க்கு, ஆற்றுப்பெருக்கற்று அடிசுடும் அக்காலத்தே அரிதின் வந்து பயனூட்டும் அவ்வாற்று வெள்ளம்போல், அவர் வறுமை ஒழித்து வளம் கொழிக்க உதவும் வள்ளியோனுய் வாழ்ந்தான் நன்னன்; கின்றேத்தும் சூதர், இருந்து ஏத்தும் மாகதர், பாணர், கூத்தர் முதலாயிைேர்க்குப் பகைவரை ஒட்டிப் பெற்ற பேரரசுகள் அனேத்தையும் ஒருங்கே அளித்தும் அவன் அமைதியுறுவானல்லன்; பெருமழையைப் பொய்யாது பெய்த பருவமழை, மீண்டும், மீண்டும் பெய்வதேபோல், அவர்க்கு மேலும் மேலும் அளிக்கும் நாளோலக்கச் சிறப்புடையணுயின்ை நன்னன்: