பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திரையன் வாழ்ந்தான்; அவன் அன்னணுதல் அறிந்தும், நன்னன், அவளுேடு போரிட்டு, அவன் ஆற்றலை அழித்து வென்முன் எனின், அவன் ஆண்மையினே என்னெனப் புகழ்வது தன் நாட்டைச் சூழ இருந்த சிற்றரசுகளே வெற்றி கொள்வ தோடு, நன்னன் போர்வேட்கை தணிவுற்றிலது; அவன் தன் காலத்தே பெரும்படை யுடையாய்ப் பேரரசராய் வாழ்ந்த வேந்தர்களையும் வென்று வீறுபெற விரும்பினன்; அவ்வாறே அவர்களை வென்று, அவர் தம் மனைவிமார் தலையை மழித்து, அக் கூந்தலால் கயிறு திரித்து, அக் கயிற்ருல், அவ்வேந்தர்தம் யானைகளைப் பிணித்துக் கொணர்ந்தான்; எத்துணைக் கொடுமை நிறைந்த போர் வெறியுடையான் நன்னன் என்பதை இந் நிகழ்ச்சி உணர்த் திவது உணர்க. 'உான்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை குழாது சுரக்கும் நன்னன்.” (அகம்: கசக) "தனந்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள்ளிறவின் குப்பை யன்ன உறுபகை தரூஉம் மொய்பமூசு பிண்டன் முனைமுரண் உடையக் கடந்த வென்வேல், இசைால் ஈகைக் களிறுவீச வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆா சன்னன்.” (அகம்: கடுஉ) 'பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வேந்தர் ஒட்டிய எந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சியிற் கொடிதே.” - (நற். உ.எ0) அக்கால அரசர் ஒவ்வொருவரும், அவரவர் விரும்பும் மரம் ஒன்றைத் தம் காவல் மரமாகக் கொண்டிருந்தனர்; நன்னனும் வாகை மரத்தைக் காவல் மாமாக்கொண்டிருந் தான்; வாகையைக் காவல் மரமாக் கொண்டதோடு, அம் மரத்தின் பெயரால் வாகை யெனும் ஊர் ஒன்று கண்டு, அவ்வூர் ஆட்சியைத் தன் இனத்தவனும், தின்பால் அன்பு