பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திரையன் இகலடு கற்பின் மிகுதிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது.” 'வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலே இழையணி யானை இயல்தேர் மிகுதிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண்கடர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப், புள்ளொருங்கு அங்கண் விசும்பின் விளங்கும் ஞாயிற்று ஒண்கதிர் தெருமைச் சிறகரிற் கோலி நிழல்செய்து உழறல் காணேன் யான் எனப் படுகளம் காண்டல் செல்லான் சினம்சிறந்து உருவினை நன்னன் அருளான் காப்ப.” (அகம்: கூகசு-உ0அ) பாழிப் பறந்தலை சிகழ்ச்சிக்குப் பின்னர், நன்னன், அடிபட்ட புலியென ஆயினன்; அவன் உள்ளம் ஒருநிலை யில் கில்லாது உழன்றது. அந் நிலையில் நிகழ்ந்த கிகழ்ச்சி யொன்று, நன்னனுக்கு நீங்காப் பழியொன்றைத் தேடித் தந்தது. நன்னன் தோட்டம் நறுமாமரங்கள் கிறைந்தது; ஒருநாள், அத்தோட்டத்த மாங்காய் ஒன்று, அருகே ஒடிய அருவியில் மிதந்துவந்தது; அவ்வருவியில் நீராட வந்த பெண் ஒருத்தி, அக் காய் நன்னன் தோட்டத்துக் காய் என அறியாது எத்ெதுத் கின்று விட்டாள்; அஃது அறிந்தான் நன்னன்; அவளைக் கொலை செய்யத் துணிந் தான்; அந் நிலையில், அப்பெண்ணேப் பெற்ருேர், அவள் கிறை பொன்னலாய பாவையும், எண்பத்தொரு யானே களும் ஈடாகத் தருகிருேம்; ஏற்று அவளை விடுக” என வேண்டியும் கேளாது, அவளேக் கொலைபுரிந்தான். நன்னன் கொடுஞ்செயலை நாடு அறிந்து கண்டித்தது; பெண்கொலைக்குக் காரணமாயது நன்னன் நறுமா என அறிந்த கோசர் எனும் கூட்டத்தார், நன்னன் நாட்டிற் புகுந்து, அருமையுடன் அவன் போற்றி வளர்த்த அம்மா வினை வெட்டி வீழ்த்தித் துண்டுகளாக்கிக் கம் மர்க்கக்