பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திரையன் தனர் போலும்” என்று கூறி அதற்கு ஆதாரமாகக் கீழ் வரும் பாக்களையும் காட்டி, "இவற்றுள் கோசர் வன்கட் சூழ்ச்சி இன்னதென்பது, அகுதை மடப்பிடிப் பரிசில் பிறி தொன்று குறித்ததனுல் அறியக் கிடப்பது காண்க” என் டி ம. க.மு.வா. ‘நன்னன், நறுமா கொன்று நாட்டிற் போகிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே." "இன்கடுங் கள்ளின் அகுதை தங்தை வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர் மடப்பிடிப் பரிசில் மானப் பிறிதொன்று குறித்தது அவன்நெடும் புறநிலையே..? (குறுங்: எக-உக அ) அகுதை வரையாது வழங்கும் வள்ளலாவன் எனப் புலவர் போற்றும் புகழ் உடையவன்; அவன், இவர்க்கு இது அளித்தால், இன்னது உண்டாம் என ஒன்றை, ன்திர் நோக்கி அளிக்கும் அறவிலைவணிகனவன் என எதிர் பார்த் தல் இயலாது; அகுதை, தன் பகைவனே அழித்தற் பொருட்டே அகவன் மகளிர்க்குப் பிடியானையைப் பரிசாக அளித்தான் எனல் அவன் வண்மைக்கு இழுக்காம்; அவன் அளித்த பரிசில் அந்நோக்கு உடையதாயின், அதைப் புலவர்கள் போற்றிப் புகழார்; மேலும் அகவன் மகளிர், நன்னன் மாமரத்தில் பிடியானயைப் பிணித்தனர் என் முல், அவ் வகவன் மகளிர்பால் அன்புடைய நன்னன், தன் மாமரத்தைக் காக்க, அவரைத் துன்புறுத்தல் வேண்டுவ தில்லை; அவர் பிணித்த பிடியானையைக் கட்டவிழ்த்து விட்டால் அதுவே போதும்; தன் மாமரத்தைக் காக்க, மேலும், வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையராய அகவன் மகளிர், கம்பால் அன்புடையனுய்ப் பரிசளிக்கும் பேரரசன் ஒருவனுக்கு அழிவுதரும் அரசியல் சூழலில் , தலையிடார்; அகுதை ஆற்றல் மிக்க பெருவீரன் என்ப"