பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. நாஞ்சிற் பொருநன் குமரிமுனைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் நாஞ்சில் என்ற பெயருடைய தொரு மலேயுண்டு; பொதி யின் மலைத் தொடர்களுள் ஒன்ருய அம்மலை, இன்று. மருத்துமலை என வழங்கப் பெறுகிறது; பண்டு, அது நஞ் சிலாமலே என்ற பெயர் பூண்டிருந்தது எனக் கூறுகின் றனர், அம்மலையை அடுத்து வாழ்வார். காஞ்சில் மலையைச் சூழ இருந்த நாடும், நாஞ்சில் எனும் பெயரே கொண்டது; நாஞ்சில் நாடு, நல்லவளஞ் செறிந்த நாடு; நாஞ்சில் நாட்டில் விதைக்க வித்து மழையின்மையால் கெடுதல் அறியாது, கரும்புபோல் வளர்ந்து காட்சிதரும் கவின் உடையது; அந் நாட்டு நீர்நிலைகள் கோடைக்காலத்தும், வற்றி வளங் குன்றுவதில; அந் நாட்டு ஆறுகள், தெளிந்த நீருடன், வேங்கைப்பூக்களையும் கொண்டு செல்லும்; இவ்வாறு வளங் கொழிக்கும் வனப்புடையது அந் நாடு. "கயத்திட்ட வித்து வறத்திற் சாவாதி: கழைக்கரும்பின் ஒலிக்குந்து; கொண்டல் கொண்டநீர் கோடை காயினும் கண்ணன்ன மலர் பூக்குந்து; ... ' கருங்கால் வேங்கை மலரின் நாளும் பொன்னன்ன வீசுமந்து மணியன்ன நீர் கடற்படரும் செவ்வமைப் படப்பை நாஞ்சில்.” (புறம்: கங்.எ) நாஞ்சில் மலையையும், அதைச் சூழ உள்ள நாட்டை யும் ஆண்டிருக்கான் ஒரு வில் வீரன்; அவனே காஞ்சிற் பொருநன் எனவும் நாஞ்சில் வள்ளுவன் எனவும் பெய ரிட்டு அழைத்தனர், அக்கால மக்கள்; காஞ்சில்மலைக்கு வடகிழக்கே உள்ள வள்ளியூர், நாஞ்சில் வள்ளுவன் பெயர் கொண்டு பிறந்த ஊராம் என்பர் ஆராய்ச்சியாளர்; நாஞ்சில் வள்ளுவன், பாண்டியர் படைத்தலைவனுய்ப் பணியாற்றும் பெருமையுடையோனவன்; அதனல், அப் பாண்டியர்க்கு