பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாஞ்சிற் பொருநன் 48 மருதன் இளநாகனர் முதலாய புலவர் பெருமக்கள் அவனைப் பாடிப் பெருமைசெய்வாராயினர். நாஞ்சிற் பொருநனைப் பாடிப் பரிசில்பெற விரும்பிய ஒளவையார், பலாமரம் பல வளர்ந்து வளம்பெற்றிருக்கும் அவன் காஞ்சில் மலையடைந்து அவனைக் கண்டு பாராட் டினர்; ஒளவையின் அருமை யுணர்ந்த அவன், தன் பெருமை தோன்றப் பெரிய யானை ஒன்றைப் பரிசாக அளித்தான்; அதைப் பெற்றுக்கொண்ட ஒளவையார் அவ னேப் பாராட்டிய பாடல் மிகவும் நயம் உடைத்து; அவனைப் பாடிய புலவர்கள் பலாாதல் அறிந்த ஒளவையார், அவர்கள் அனைவரையும் நோக்கி, புலவர் பெருமக்களே! எங்கள் நாக்கு செம்மையான நாக்கு தகுதியில்லோர் செல்வம் வியத்தல் செய்யாப் பெருமை மிக்கது என்றெல்லாம் பெருமை கொள்ளும் நீங்கள் கடைசியில் அறிவிற்குறைந்த இவனைப் போய்ப் பாடினிர்களே! இவன் அறிவின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டுக் கூறுகிறேன் கேளுங்கள் வீட்டில் அரிசியில்லாக் குறையால், பெண்கள், கொல்லையில் விளைந்திருக்கும் கீரையைப் பறித்துக் கொணர்ந்து உணவாக்கி வைத்திருந்தனர்; அக் கீரை உணவை மட்டும் உண்ண விரும்பாத யான், இந் நாஞ்சிற் பொருநன்பால் சென்று சிறிது அரிசி வாங்கி வருவோம் என்று அவனேப் பாடிகின்றேன்; பசித்து வந்து கிற்கும் எனக்கு அவன் என்ன கொடுத்தான் தெரியுமா? பாலைநிலத்திற் கிடையே படுத்துக் கிடக்கும் பெரியமலைபோலும் யானை யொன்றைக் கொடுத்தான்; அதைக் கண்ட நான் ஐய! எனக்கு இப்போது வேண்டுவது அரிசி, அரிசியின்றிப் பசியால் வருந்தும் எனக்கு யானையைக் கொடுக்கின்ற னேயே, இது முறையா? இன்தக் கொண்டு சென்று யான் என்ன செய்வேன்? என் சிறு வயிற்றிற்கே உணவு பெற மாட்டாது வருந்தும் இந் நிலையில் இப்பெரிய யானையை எவ்வாறு பேணவல்லேன்? என்று குறை கூறினேன். இவ்வாறு எடுத்துக் கூறிய பின்னரும் அதைப் புரிந்து