பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. நாலைகிழவன் நாகன் பாண்டிநாட்டில், அருப்புக்கோட்டையை அடுத்து நாலை என்ருேர் ஊர் இருந்தது; பண்டு நாலை என வழங்கிய அவ்வூர், இன்று நாலூர் என வழங்குகிறது; அந்நாலை நகர்க்கு உரிமை பூண்டிருந்தான் வீரன் ஒருவன்; நாகன் என்பது அவன் இயற்பெயர். அதனல், அவனே காலை கிழவன் நாகன் என அக்கால மக்கள் அழைத்தனர். நாகன் பேராண்மை மிக்க பெருவீானுவன்; அவன் வேலேந்திக் களம் புகுந்தால், களமெல்லாம் பிணக்குவி யலே காட்சிகரும்; அப் பிணம் உண்டு பசி தீர்த்த பருந்துகள் அவன் வெற்றி விளங்கப் பாடிப் பறக்கும்; அத்துணே ஆண் மையும், அதற்கேற்ற படைவன்மையும் உடையான் நாகன். நாகன் நாலையை உரிமையாக் கொண்டு வாழ்ந்திருந்த காலத்தே, பாண்டிய அரியணையில் அமர்ந்திருந்த அரசன், தன்னுட்டை அடுத்துள அரசுகளையெல்லாம் அடக்கி ஆள எண்ணினன்; அதற்கு, அறிவும் ஆற்றலும் ஒருங்கே வாய்ந்த படைத்தலைவன் வேண்டும் என்பதை உணர்ந்தான்; நாகன் போர்க்களம் புகுவார்க்கு வேண்டும் படைத்துணை அளிக்கவும், அறநெறி இயலும் ஆட்சிநலம் வேண்டு வார்க்கு, அத்தகு அரசியலை அமைக்கவல்ல அறிவுத் துணை அளிக்கவும் வல்லனுதலை அறிந்தான்; உடனே, அவனைத் தன் படைத்தலைவனுக்கினன்; நாகனும், பாண்டியற்கு அறி வாலும், ஆற்றலாலும் ஆருயிர்த்துனே யாய் அமைந்தான். அகத்தடி ஒருபாற் சாய்ந்து கோடாவாறு ஒப்ப கடக் கும் பெருமிதப் பகடேபோல், ஆண்மை, அறிவு ஆகிய இவற்றுள் ஒன்றினும் குறைபாடில்லா ஊக்கமும், உரனும் ஒருங்கே கொண்டு உதவிஞன்; இதனுல், மாற்ருர் முரச மும், மண்ணும் எண்ணிறந்தன கொண்டு, ஈடு இணையின்றி வாழ்ந்தான் பாண்டியனும்; இவ்வாறு வாழ்ந்த பாண் டியன், மண்பலதந்த திருவீழ்துண்பூட் பாண்டியன் என