பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. பண்ணி கோடைக்காலத்துக் கொடுமையின் நீங்கி வாழ விரும்பும் மக்கள், விரும்பிச் செல்லும் வாழிடங்களுள் கோடைக் கானலும் ஒன்று; இக் கோடைக்கானற் குன்றே, பண்டு, கோடைப் பொருப்பு எனப் பெயர் பூண்டிருந்தது; பழனி மலைத்தொடரின் ஒரு பகுதியாகிய அக்கோடை மலையை, அம்மலைச் சாரலின் கண் அமைந்திருந்த கடியம் எனும் ஊரிடத்தே இருந்து ஆண்டுவந்தான் ஒரு வில் வீரன்; அவன் இயற்பெயர் பண்ணி; கோடைப் பொருநன் எனவும் அழைக்கப் பெறுவன்; வேட்டை நாய்கள் பல பின் தொடர்ந்து வர, கூரிய அம்பும், விரைந்து அம்பேவ வல்ல வில்லும் உடையணுய் வேட்டைமேற் சென்று, மான் முதலாயினவற்றைக் கொன்று கொண்டு வருதலோடு, காட்டு யானைகளை உயிரோடு கைப்பற்றி வருதலிலும் வல்ல குவன். அதனல், இவனே வேட்டுவன் எனவும், நெடு வேட்டுவன் எனவும், கடியநெடு வேட்டுவன் எனவும், அழைத்துச் சிறப்புச் செய்தலும் உண்டு. பண்ணி, பாண்டியர் படையில் பணியாற்றும் பெருமை பெற்ருேளுவன்; தான் கைப்பற்றிய யானைகளுக்கு மொழி அறிவித்துப் பழக்கவல்ல பேரறிவும் உடையனவன்; தன் பால் அடைக்கலம் புகுந்தாரை ஆதரிக்கவல்ல அருள் உள் ளமும், கன்னப் பகைத்தாரை அழிக்கவல்ல ஆற்றலும் ஒருங்கே வாய்ந்த உயர்வோஞய பண்ணி, தன்னைப் பாடி வரும் பாணர் முதலாம் பரிசிலர் தமக்கு வரையாது வாரி வழங்கும் வள்ளன்மையும் உடையனவன். 'திருவீழ் மார்பின் தென்னவன் மறவன், குழியிற் கொண்ட மராஅ யானை - மொழியின் உணர்த்தும் சிறுவரை யல்லது வரைகிலே யின்றி இரவலர்க்கு ஈயும் வள்வாய் அம்பின் கோடைப் பொருநன் ί οι α ι α π .