பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. பழையன்மாறன் பேரரசரும் அஞ்சும் பேராற்றல் பெற்று வாழ்ந்த வீரர்பலர், தமிழகத்தே வாழ்ந்திருந்தனர்; அத்தகையா ருள் ஒருவன், பழையன்மாறன் எனப்படுவான். பழையன் எனவும் அழைக்கப் பெறுவன். அவன், கள்ளக்குறிச் சியை அடுத்திருந்த மோகூரில் வாழ்ந்திருந்தானதலின், மோகூர் மன்னன் எனவும் வழங்கப் பெறுவன். பழையன் வாழ்ந்த மோகூர் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ளமோகூரே, என்பது, அப்பகுதியில், பழையன் அரசியலோடு தொடர் புடைய குட்டுவனஞ்சூர், கோசர்பாடி, ஆலம்பலம் என்ற பெயருடைய ஊர்கள் இருப்பதால் உறுதியாதல் காண்க. பழையன் மாறன் பாண்டியர் படையில் பணியாற்று பவன். அதனுல், தான் விரும்பும் தன்போாசற்குரிய மாறன் என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டதோடு, அவ்வரசர்க்கு உரிய காவல் மாமாகிய வேம்பினேயே, தன் காவல் மரமாகவும் கொண்டு காத்து வந்திருந்தான். பாண் டியன் நெடுஞ்செழியனேப் பாராட்டிய புலவர் மாங்குடி மரு தஞர், பாண்டியர் படையில் பணியாற்றும் கோசர் இனவழி வந்த வீரர்கட்கு மாறனே படைத்தலைவன் எனக்கூறுவதா அம், பழையன் மாறன், பாண்டியர் படைத்தலைவனுவன் என்பது பெறப்படுதல் காண்க.

  • பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்

பெரும்பெயர் மாறன் தலைவ கைக் எந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின்நின் வாய்மொழி கேட்ப.” (மதுரைக் : எனக - எசு) பழையன் மாறன், பாண்டியர் படைத்தலைவனுய், அப் பாண்டியர்க்குரிய தலைநகராய கூடல் நகரைக் காத்திருந்த காலை, வெள்ளம்போல் பாத்த பெரும்படையுடைய கிள்ளி வளவன், கூடலை வளைத்தப் பெரும் போர் புரியத் தொடங் கின்ை. அதுகண்டு கடுஞ்சினம் கொண்ட பழையன், தன் களிற்றுப் படையோடும் புறம் போந்து, கிள்ளி வளவனே