பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பழையன்மாறன் பல்லிருங் கூந்தல் முரற்சியால் - குஞ்சா வொழுகை பூட்டி.” (பதிற்று : பதிகம்: இ) * பழையன் காக்கும் குழைபயில் நெடுங் கோட்டு ". حة. " . . تنة بي . வேம்புமுதல் தடித்த ஏந்துவாள் வலத்துப் போங்தைக் கண்ணிப் பொறைய.” (சிலம்பு : உஎ : கஉச-உசு) சோன்பால் பெற்ற தோல்வி பழையன் பெயர்க்குப் பெரியதோர் இழுக்கினேத் தந்தது. ஆனல், அது நிகழ்ந்த சின்னுட்களுக்கெல்லாம், அப்பழியினின்றும் நீங்கிச், சேரனே வென்றிருந்தால் பெற்றிருக்கும் புகழினும், பெரியதொரு புகழைப் பெற்று விட்டான் பழையன். தமிழகம், கன்னேரில்லாச் சிறப்புற்று விளங்குவது கண்டு பொருமை கொண்ட வடநாட்டு அரசர்கள், வாய்க்கும் போதெல்லாம், தமிழகத்தின்மீது படையெடுத்துவர்த் தலைப்பட்டனர். தன் மொழியே பேசும், தன் அண்டை நாட்டு அரசன் ஒருவல்ை, கோல்வியுற்ற மோகூர்ப் பழை யன், தமிழகத்தின்மீது படையெடுத்துப் போத்த வட நாட்டுப் பேரரசன் படையொன்றை வென்று துரத்தி விழுப்புகழ் பெற்ருன். - வடநாட்டுப் பேரரசுகளுள், மெளரியப் பேரரசும் ஒன்று ; அப் போாசர் படையொன்று, தமிழகத்தைத் கன்னடிப்படுத்தும் நோக்குடன், தென்னுடு நோக்கி வரலாயிற்று ; அவ்வாறு வந்த பெரும்படைக்குத், தமிழ கத்தின் வடவெல்லையை அடுத்து வாழ்ந்த வடுகர் என்பார் துணைபுரிந்தனர் ; வடுகர் துணையும் பெற்று வந்த அப் படை, வழியில், தங்களின் நெடிய தேர்ப்படை செல்லா வாறு கின்று தடுத்த மலைகளையெல்லாம் உடைத்து வழி செய்துகொண்டு வந்தது அப்படை வந்த பெரும்பட்ை, பழையன் காக்கும் மோகூரை வளைத்துப் போரிட்டது ; பழையனே வென்ருல் அல்லது, பாண்டிநாடு முதலாம் பேரரசுகளை வீழ்த்தல் இயலாது என அறிந்த அப்படை,