பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணன் 57 அம்மற்போர் நிகழ்ச்சிக்குப் பின்னர், பாணன்பால் பெரு மதிப்பு உண்டாயிற்று கட்டிக்கு அவன் போற்றல் துணைகொண்டு, ஒர் அரசமைத்து வாழவும் ஆசைகொண் டான் அவன். அக்காலை, உறையூரை ஆண்டிருந்த சித்தன் வெளியன், அத்துணை ஆற்றல் வாய்ந்தவனல்லன் என யாரோ சிலர் கூறியதைக்கொண்டு, அவனே வென்று, அவ் வுறையூர் ஆட்சியைக் கைப்பற்றத் துணிந்தான். பாணன் துணையோடு, பெரியதோர் படையையும் உடன்கொண்டு, உறையூர் சென்று, ஊர்ப்புறத்தே தங்கியிருந்தான். அவ் வாறு தங்கியிருப்பான், பாட்டிசைத்தும், பறையொலித் தும் தித்தன் வெளியனைப் பாராட்டி மகிழும் மக்கள் கூடி யிருக்கும் உறையூர் அவையினின்றும் எழும் பேரொலி யைக் கேட்டான் ; இவ்வாறு மக்கள் பாராட்டும் மாண் புடையணுய தித்தன் வெளியன், நாம் எண்ணியவாறு அத் துணை எளியனல்லன் ” என்று எண்ணினன் ; உடனே, ஊரார் எவரும் உணராமுன்னரே, உறையூரை விட்டு ஒடி விட்டான். தன் போாற்றல் காட்டி, மக்கள் பாராட்டைப் பெறவந்த பாணன், அந்நாட்டு அரசியல் சூழலிலும் அடி வைக்க முயன்ருன் , ஆல்ை, மற்போரில், மக்கள் மகிழ வெற்றிகண்ட அவ்வீரன், அரசியல் வேட்டையில் வீழ்ச்சி யுற்ருன் : ' வலமிகு முன்பின் பாணனெடு, மலிதார்த் தித்தன் வெளியன் உறங்தை நாளவைப் பாடின் தெண்கிணைப் பாடு கேட்டஞ்சிப் போாடு கானைக் கட்டி, - பொாாஅது ஒடிய ஆர்ப்பு.” (அகம் : உஉசு)