பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. பிட்டங்கொற்றன் சேரநாட்டு ஆட்சிக்குட்பட்ட மலைகளுள் குதிரை மலேயும் ஒன்று; குதிாைமல்ே, தகர்ே ஆண்ட அகியமான் நெடுமானஞ்சிக்கும் உரியது எனக் கூறப் பெறுவதால், "நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி' (அகம்: உளட), “ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினியும்’ (புறம் : கடு.அ) - அம்மலை, அவ் வஞ்சிக்குரிய தகைேர அடுத்து இருந்தது எனக் கொள்ளு தல் பொருந்தும். சேர நாட்டு மலையாகிய குதிரைமலைய்ை, அச்சோர் குலத்தோடு உறவுடைய அதியமான்கள், உரிமை யாக்கி ஆண்டிருந்ததைப் போன்றே, அச்சோன்படைத்தலை வருள் சிறந்தான் ஒருவனும், தன் உடைமையாக்கி ஆண்டி ருந்தான். அவ்வாறு ஆண்டிருந்தவன், பிட்டங்கொற்றன். 'பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன், மைதவழ் உயர் சிமைக் குதிாைக் கவாஅன்? (அகம்: கசக.) - பிட்டங்கொற்றன், பேராற்றல் உடையனவன் பகை வர் காட்டின்மீது போர்தொடுத்துப் புறப்படுங்கால், அப் படைக்குத் தலைமைதாங்கி முன்னேகின்று, பகைவர் படை எறியும் படைக்கலங்கள் அத்தனேயும் தன் மேலேற்றுத் தன்படையினைக் காப்பதும், பகைவர் பெரும்படை, தன் நாட்டின் மீது படையெடுத்து வருங்கால், அப்படை தன் நாட்டுள் புகுந்துவிடாவண்ணம், பெருக்கெடுத்து ஓடிவரும் ஆற்றுவெள்ளத்தை இடைகின்று கடுக்கும் கல்லனே போலத், தான் ஒருவகைவே நின்று தடுத்து அழிப்பதும் ஆற்றல்மிக்க பெருவீரர்க்கு அழகாம். பிட்டங்கொற்றன் ஒரு பெரிய போர்வீரன் ; ஆதலின், அவன்பால், இப்பண்பு. இயல்பாகவே அமைந்து விட்டமையால், அவனேக் காண் பது பரிசிலர்க்கும் அருமையாம். பிட்டங்கொற்றன், பகைவர் படைக்கலங்களால் அழியாத்திண்மை வாய்ந்த வன்; படைப்பயிற்சிபெறும் கோசர், வேலையும், அம்பை