பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொகுட்டெழினி 73 தங்கும். நடந்து நடந்து வெந்த காலுடையாாய வழிப் போவார், வழி, ஆறலை கள்வர் அற்றது. ஆதலின், அவர் அலைப்பரே என அஞ்சி அரண் அமைந்த இடத்தேடி ஒடி ஒளியாமல், தாம் விரும்பும் இடங்களிலேயே இருந்து இளேப்பாறுவர். நாடு கள்வர் அற்றது. ஆதலின், நெல் முதலாம் பொருட்குவியல்கள் காப்பார் எவரையும் பெருமல் களங்களில் தனித்தே விடப்படும். அத்துணை கல்லாட்சியுடையது அங்காடு. ' பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகர்ே.” (பதிற்று: எஅ) ' ஆர்வலர் குறுகினல்லது, காவலர் கனவினும் குறுகாக் கடியுடை வியன்ககர்.’ (புறம்: கூகC) கன்றமர் ஆயம் கானத்து அல்கவும், வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும் களமலி குப்பை காப்பில வைகவும், - விலங்கு பகைகடந்த கலங்காச் செங்கோல்.” . (புறம்: உங்.) இத்துணை வாழ்வும், வனப்பும் மிக்க நாட்டிலே, அத் துணைப் பீடும் பெருமையும் மிக்க மரபிலே பிறந்து, 'நெல்லி அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த” அருட் பேருள்ளமுடையான் என ஆன்ருேர் வாழ்த்த ஆண்ட அதியமான் நெடுமானஞ்சியின் அருமை மகன் பொகுட் டெழினி. பொகுட்டெழினியும் அவன் தந்தை அதிய மானைப்போன்றே பேராற்றலும், போர்வேட்கையும் உடையவன்; பகைமன்னர் பலரை வென்று, அவர் அரண் களைக் கைக்கொள்வதோடு அமையாது, ஆங்கு இறந்து வீழ்ந்த வீரர்களின் உடலினின்றும் வெளிப்போந்த குருதி யால் சாம்பட்ட நிலத்தில், கழுதை ஏர்பூட்டி உழுது, வெள்ளைவாகும் கொள்ளும் விதைத்து, அப்பகைவர் காட்டைப் பாழாக்கிப் பார்த்த மகிழும் போர்வேட்கையும்