பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூ. மல்லிகிழான் காரியாதி காரி என்றபெயர், தமிழ் நூல்களில் பல்வேறிடங் களில், பல்வேறு தொடர்புகளில் ஆளப்பட்டுளது. காரி யாறு, ஒர் ஆறு; காரிநாடு, ஒரு நாடு; காரிக்குதிரை, ஒரு குதிரை; மலையமான் திருமுடிக்காரி, ஒருவள்ளல்; காரி கிழார், ஒருபுலவர். இத் துணைச் சிறப்பு வாய்ந்த காரி என்ற சொல்லைத் தன் பெயரின் ஒருபகுதியாகக் கொண்ட ஒருவன், வீரனும், வள்ளலுமாய், மல்லி என்ற ஊரில் வாழ்ந்திருந்தான்; அவன் முழுப்பெயர், மல்லிகிழான் காரி யாதி. அவனைப் பாராட்டிய பாடலில், குடநாடு, குறிப் பிடப்படுவது கொண்டு, அவனுக்குரிய நாடு, குடநாடு என்பர் சிலர்; காரியாதிக்குரிய மல்லிநாடு, இப்போதுள்ள சீவில்லி புத்துரைச் சூழ உள்ள நாடாம்; சீவில்லிபுத்தார்க் கோயிற் கல்வெட்டுக்கள், சிவில்லிபுத்துரை, மல்லி நாட்டுச் சீவில்லிபுத்துார் என்றே குறிப்பிடுகின்றன எனினும், மல்லிநாட்டுப் புத்துார் எனும் சொல்லே, மல்லிபுத்துார் எனவும், பிற்காலத்தே வில்லிபுத்துர் எனவும் மருவியது என்று கூறுவாரும் உளர். காரியாதிக்குரிய மல்லிநாடு, சிறியபல அரண்களை நெருங்கக் கொண்டிருப்பது ஆதலின், அங்காட்டுள் அவ லுக்கு வேண்டியோரும் போர் ஒழிந்து அமைதி கிலவும் காலத்திலேயே நுழைதல் இயலும்; போர்க்காலத்திலோ, எங்கும் திரியும் கிங்களும், அங்கு நுழைதல் இயலாது; அத்தணேச் சிறந்த காவல் அமைந்தது, அந்நாடு; அங்காட் த்ெ தலைவயை காரியாதி, குடநாட்டு மறவர் கொன்று கொணர்ந்த எய்ப்பன்றியின் கறி விரவிச் செய்த வெண் சோற்றினை, விடியற்காலையில், பனையோலையால் முடைந்து செய்யப் பெற்ற உண்கலத்தில் இட்டு வருவார் அனைவர்க் கும் வழங்கி மகிழ்விப்பன். காரியாதியின் இக் கொடைச் சிறப்பினைக் கண்டு களித்த ஆவூர் மூலங்கிழார், உள்ளன் புடன் உவந்தீயும் காரியாதியின் கொடைப் பொருளாம் இச்