பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. முசுண்டை வீரர்களாய், வள்ளல்களாய் வாழ்ந்தார் பண்டைத் தமிழகத்தில் பலராவர்; அன்னருள் முசுண்டை என்பா லும் ஒருவன். வேம்பி நகர்க்கண் வாழ்ந்த முசுண்டை, வெல்லவல்ல வேற்படையும் பெற்றிருந்தான். அவன் தன்னைப் பாடிவரும் பாணர் முதலாம் பரிசிலர்க்கு, அக் கால வள்ளல்கள் எவரும் வழங்கிக்காணு வளம்பல அளிப் பன் ; வளர்ந்து ஆடும் அழகிய சிமிலைக்கொண்ட காளை களைக் கொணர்ந்து, அவற்றின் கோடுகளுக்குப் பொற் பூண் செறித்துப், பொன்னரி மாலையைக் கழுத்தில் சூட்டி முன்னே அளித்து, அறுசுவை உணவினே ஆ உண்பித்துப் பின்னர்க் களிறும் தேரும் கொடுத்து மகிழும் மனவளம் உடையஞய் வாழ்ந்து மாண்புற்றவன் முசுண்டை வாழ்க முசுண்டை ' விளைக வேம்பி வளர்க அவன் கெர்டை1. 'வள்வார் விசிபிணித்து யாத்த அரிகேர்ல் தெண்கிணை இன்குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் பொன் கோட்டுச் செறித்துப் பொலந்தார் பூட்டிச் சாந்தம் புதைத்த எந்து துளங்கு எழில்இமில் ஏறுமுங் துறுத்துச் சால்பதம் குவைஇ நெடுங்தேர் களிற்ருெடு சுரக்கும், கொடும்பூண் பல்வேல் முசுண்டை வேம்பி.” (அகம் : உசக)