பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடனே தங்கமணிக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. “கண்னுப்பாட்டி, நாளைக்கே அந்தக் கோயிலைப் பார்க்கவேனும்” என்று தங்கமணி உற்சாகத்தோடு சொன்ஞன்.

“ஆமாம் பாட்டி நாங்கள் மூன்று பேரும் போகவேனும்” என்று கூவினாள் கண்ணகி.

“ஜின்காவை மறந்துவிட்டாயா? அது இல்லாமல் உன் அண்ணன் அசையமாட்டானே?” என்றான் சுந்தரம்.

“சரிதாண்டா, கோமாளி, அண்ணன் வந்தால் . . . .” என்று அவள் முடிப்பதற்கு முன்பே “தம்பியும் வரும்” என்று நகைத்தான் சுந்தரம்.


[7]

காட்டு மாரியம்மன் கோயில்!

அடுத்த நாள் மாலையில் வெய்யில் சற்றுக் குறைந்ததும் காட்டு மாரியம்மன் கோவிலைப் பார்ப்பதென்று ஏற்பாடாயிற்று.

அதன்படி மறுநாள் மாலை மூன்று மணிக்கே கிளம்பி விட்டார்கள். “சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறோம். அங்கே சுத்தமான தண்ணிர் கிடைக்குமா?” என்று தங்கமணி பாட்டியிடம் கேட்டான்.

“அங்கே நல்ல ஒடை ஒன்று ஒடுகிறது. அதில் ஒடும் தண்ணிரைக் குடிப்பதால் கெடுதல் வராது” என்ருள் பாட்டி.

சிற்றுண்டி டப்பாக்களை ஒரு துணியில் வைத்துக் கட்டினார்கள். “அதை நான் சுமந்துகொண்டு வருகிறேன். எனக்

19

19