பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“கோட்டையைப் பார்த்து விட்டோம். ஆனால் புதையல் இருக்குமிடத்தை இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்யவில்லையே?” என்று தங்கமணி தனது யோசனையின் காரணத்தை விளக்கினான்.

“அதைத்தான் கோட்டை விட்டுவிட்டோம்” என்றான் சுந்தரம்.

“ஒரு வேளை புதையல் என்பதெல்லாம் வெறும் கற்பனையோ?” என்று சிந்தித்தான் தங்கமணி.

ஜின்கா வாயில் உணவைப் போட்டுக் கன்னத்தில் அடக்குவதும் பிறகு மெல்லுவதுமாக இருந்தது. அதற்கும் நல்ல பசி.

“காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் சுரங்க வழியில்தான் புதையல் இருக்க வேண்டும்” என்று கண்ணகி திடீரென்று சொன்னாள்.

“ஆகா இதோ ஒரு துப்பறியும் சாம்பு.-இல்லை சாம்பி. மிஸ் ஷெர்லக் ஹோம்ஸ்” என்று கூறி நகைத்தான் சுந்தரம்.

“ஆகா எத்தனை பெரிய ஜோக் அடித்து விட்டான், உனக்கு ஜோக் சுந்தரம் என்று பட்டம் கொடுக்கலாம்” என்று கண்ணகி சளைக்காமல் பதில் அம்பு தொடுத்தாள்.

“எதற்கும் சீக்கிரமாக அந்தக் குகையைப் போய்ப் பார்த்து விடுவோம். ஒரு வேளை கண்ணகி சொன்னதே உண்மையாக இருக்கலாம்” என்று தங்கமணி கூறிவிட்டுக் காலியான இலைகளையெல்லாம் சுருட்டி, ஒரு பக்கத்தில் வீசினான்.

28