பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்த இருட்டில் பறந்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த ஊர்மக்கள் கூறியவாறு அங்கு கருவண்டுகள் ஒன்றுமே இல்லை. வௌவால்களைத்தான் அப்படி எண்ணினார்கள் போலிருக்கிறது.

குகைக்குள்ளே சுமார் 60 மீட்டர் சென்ற பிறகு ஒரு சிறிய திருப்பம் காணப்பட்டது. தங்கமணி ஆவலோடு அதில் நுழைந்தான், மற்றவர்களையெல்லாம் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு அவன் மட்டும் ஜின்காவோடு அதில் கொஞ்ச தூரம் சென்றான்.

ஆனால் அந்தத் திருப்பத்திற்குமேலே ஒரு மீட்டர் வரைதான் வழி இருந்தது. அத்துடன் குகை முடிந்துவிட்டது. விளக்கைப் போட்டு அவன் துருவித் துருவிப் பார்த்தான். அதற்குமேல் வெறும் பாறைதான் தென்பட்டது.

அவன் திரும்பி வந்து அனைவருக்கும் அந்த உண்மையைத் சொன்னான். எல்லாருடைய உற்சாகமும் திடீரென்று மங்கிவிட்டது.

“அந்தப் பூசாரி எல்லாரையும் ஏமாற்றிப் பணம் பறிக்கிறான். சுரங்கப் பாதையென்று காட்டு மாரியம்மன் சிலைக்குப் பின்னால் இரண்டு மூன்று படிகளைக் காட்டிப் பணம் சம்பாதிக்கும் எத்தன் அவன்” என்றான் சுந்தரம்.

“நான் அப்பவே நினைத்தேன்” என்றாள் கண்ணகி.

“நினைத்து என்ன செய்கிறது? சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கோபித்துக் கொண்டான் சுந்தரம்.

“அவனுடைய கொடுவாள் மீசையைப் பார்த்து நான் பயந்து விட்டேன்” என்று விளக்கம் தந்தாள் கண்ணகி.

“சரி, குகைக்குள் இருந்துகொண்டே பேசினால் எதிரொலிக் குழப்பம்தான் காதில் விழுகிறது. முதலில் வெளியே

30