பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

இந்த நூலுக்கு முன்னுரை தேவையா? என்னையே நான் கேட்டுக்கொள்கின்றேன்.

சில உண்மைகளையும், நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வதற்கு முன்னுரை தேவைப்படுகிறது. அதனால் எழுதுகின்றேன்.

துணிச்சலும் செயல்திறனும் கொண்ட கதைகள் (Adventure Starties) நம் இளைஞர்களுக்கு நிறைய வேண்டும். நூற்றுக்கணக்காக வேண்டும்.

தங்கள் சொந்த அறிவுத் திறமையைப் பயன்படுத்தி அவர்களே பல அரிய செயல்கள் செய்வதை எடுத்துச் காட்டினால் இளம் வயதினர் உற்சாகங்கொண்டு அந்த வழியைத் தன்னம்பிக்கையோடு பின்பற்றுவார்கள்.

பன்னிரண்டு, பதிமூன்று வயதாகி இருக்கும். அப்பொழுதும் பெற்றோர்கள் “அவனுக்கு அல்லது அவளுக்கு என்ன தெரியும்? - குழந்தை” என்று சொல்லுவார்கள். தங்கள் முயற்சிகளிலும் யோசனைகளிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வதை இவ்வாறு புறக்கணிப்பதால் இளைஞர்கள் தன்னம்பிக்கை பெறுகின்ற வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்; தாழ்வு மனப்பான்மை மேலோங்க இது காரணமாகின்றது.

இந்த நிலைமை இக்காலத்திலே சிறிதுசிறிதாக மாறி வருகின்றது. இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் கதைகள் எழுத வேண்டுமென்பது என்னுடைய ஆவல்.

2