பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.[17]

பாட்டியிடமிருந்து பிரிவு!

அந்த நான்கு முரடர்களுக்கும் புதையலைத் திருட முயன்றதற்கும், மூவரையும் கொலை செய்ய முயற்சி செய்ததற்கும் பல ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது நிச்சயம்.

தங்கமணியையும், சுந்தரத்தையும், கண்ணகியையும் போலீஸார் மிகவும் பாராட்டினார்கள். அவர்கள் முயற்சியால்தான் திப்புசுல்தான் காலத்துத் தங்கக் காசுகள் கிடைத்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக் காசை சப்-இன்ஸ்பெக்டர் பரிசாகக் கொடுக்க முன்வந்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“இந்தப் புதையல் சட்டப்படி அரசாங்கத்திற்குச் சேர வேண்டியது. ஆகவே எங்களுக்கு அதில் ஒன்றுமே வேண்டியதில்லை” என்று தங்கமணி, சுந்தரம், கண்ணகி மூவரும் சேர்ந்து ஒரே மூச்சில் சொன்னார்கள். சப்-இன்ஸ்பெக்ட ருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. “நானாகவே இதில் ஒன்றையும் உங்களுக்குக் கொடுக்க முடியாது என்பது மெய்தான். ஆனால் நீங்கள் செய்த உதவிக்காக இதில் ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னால் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் நீங்களே இந்தப் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்ததைக் கண்டு எனக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறி அவர் வாழ்த்தினார். கோடை விடுமுறை இப்படி எதிர்பாராத அதிசய சம்பவங்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்ததை மூவரும் நன்கு ரசித்தார்கள்.

“கண்ணுப் பாட்டி, உங்கள் உதவியால்தான் நாங்கள் அந்தத் திருடர்களிடமிருந்து தப்பினோம். உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டோம்” என்று தம் நன்றியை

46