பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.சங்ககிரிக் கோட்டையின்
மர்மம்
[1]

லீவு வந்தது!

'“இந்தத் தடவை நீங்கள் மூன்று பேரும் சங்ககிரியிலுள்ள பாட்டி வீட்டுக்குப் போகலாம்” என்றார் தங்கமணியின் தந்தையான வடிவேல். இவர் சென்னையிலே வேலை செய்யும் ஒரு தத்துவப் பேராசிரியர்.

“மாமா, வேண்டாம்” என்று வாய்விட்டுக் கத்திவிட்டான் சுந்தரம். இவன் கோடை விடுமுறையின் போது தன் மாமா வீட்டுக்கு வருவது வழக்கம். மதுரையில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான்.

“ஆமாப்பா, பாட்டி வீடே வேண்டாம்” என்று சிணுங்கினாள் தங்கமணியின் தங்கை கண்ணகி. ஆறாம் வகுப்பில் படிக்கும் கண்ணகிக்கும் இப்பொழுது விடுமுறை.

தந்தை சிரித்துக் கொண்டே “ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“மாமா, உண்மையைச் சொல்லி விடுகிறேன். போன தடவை கோடை விடுமுறைக்குப் போனோமே அந்தப் பாட்டி படுபோர்” என்றான் சுந்தரம்.

1