பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. பெண்பாற் புலவர்கள்

' கரன்கெழு நாடன் கடுந்தேர் அவியன் என

ஒருவனே உடையேன் மன்னே; . l இருன்; எவன் பரிகோ வெள்ளியது கிலேயே ? (புறம் : க.அங்) போர்க்களத்தே வீரப்புண் பெற்று மாண்டான் கண, வன்; அஃதறிந்த மறக்குடியிற் பிறந்த அவன் மனைவி அவன் உடலை ஒன்றும் தீண்டாதவாறு அன்றிரவு காத் துக் கிடக்கின்ருள். இங்கிலையை விளக்கும் ஒரு செய்யுளை இறுதியாகப் பாடியுள்ளார், பெண் உள்ளம் அறிந்த நம் பெண்பாற் புலவர். பாம்பு அறியும் பாம்பின் கால் என்பர் ; பெண்கள் துயரைப் பெண்களே அறிவர் ; ஆகவே, க்ண்வனே இழந்த அப் பெண் வாயிலாகக், கணவனே இழந்த மகளிர்தம் துயர்நிலையைச் சித்திரித்துக் காட்டுகிருர், -

'கணவன் மார்புப் புண் அவன் உயிர் மீளவாறு செய்துவிட்டது.; ஆகவே, அது மிகமிகக் கொடிய புண் ; நடுநாள் யாமத்திலும் தும்பி வந்து புண்ணேச் சுற்றுகிறது ; அதைத் துரத்துதல் வேண்டும். உடல் வீழ்ந்து கிடக்கும் இடம், ஊர்ப்புறம். ஆகவே, எற்றிய விளக்கை எரியவிடாது அலைக்கிறது காற்று. உறங்கிப் பலநாள் ஆயினமையால், கண்களும் உறக்கத்தை மேற்கொள்ளுகின்றன ; இடை இடையே எழும் கூகையின் குரலோ அச்சத்தைத் தரு கிறது. என் கணவன் உயிர்மீண்டு எழமாட்டான என்ற ஆவலால் நற்சொல் கேட்டுகி ற்கும் பெண்கள் எண்ணமும் நிறைவேருது. தலைமயிர் கழித்து, தண்ணிரில் மூழ்கி நல் லாடை இன்றி அல்லிக்காய் அரிசி தின்னும் கைம்பெண் ணய் வாழும் கருத்திலேன் யானும். இதுகாறும் இவன்பால் பொருள்பெற்றுப் பிழைத்துவந்த ஏ பாண! எ! விறலி! இனியும்.நீங்கள் இங்கேயிருந்து வாழ்தல் இயலாது; நீங்கள் இனி எங்ஙனம் வாழ்வீர் ?? (புறம் : உஅo)

இது, அப் பெண் அழுது பாடியதாக அவர் பாடிய ஆனந்தப்பையுள். இதில், தாம் துயர்உறும் காலத்தும், தம் துயரைப் பெரிதென மதியாது, பிறர் துயரையே பெரிதெனக்கொண்ட உயர்நிலையும் விளக்கப்பட்டுள்ள வியப்பைக் காணுங்கள். . -