பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. வெண்ணிக் குயத்தியார்

வெண்ணி என்ற ஊரில் வாழ்ந்த வேட்கோவர் குடியிற். பிறந்த பெண்பாலார் இவர். வெண்ணி என்ற ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில், நீடாமங்கலத்திற்கு அண்மையில் உள்ளது; இப்போது, வெண்ணில் எனவும் கோயில் வெண்ணி எனவும் அழைக்கப்பெறும், வணிகர் குடியிலே சிறந்தார்க்கு எட்டிப் பட்டமும், படைவீரருள் சிறந் தார்க்கு ஏதிைப் பட்டமும் வழங்குவதேபோல், பழங்கால அரசர், வேட்கோவர் குடியிலே சிறந்தார்க்குக் குபம் என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். பின்னர் வேட் கோவர் என்ற பெயர் மறைய, குயவர் என்பதே குடிப்பெய ாயிற்று; குயவர் குடியிலே பிறந்து குன்ருப் புகழ்பெற்ற புலவராய் இருந்தமையால், இவர், குயத்தியார் எனக் குலப் பெயராலேயே அழைக்கப்பெற்ருர் ; அவர் பெயரோடு, அவர் பிறந்த ஊர்ப் பெயரையும் இணைத்து வெண்ணிக் குயத்தியார் என்று அழைத்தனர். இவரைப்போலவே, ஊரும் குலமும் அறிய கின்ற புலவர்களும் இருந்தனர் : ஆலத்துணர்கிழார், கோஆர்கிழார். -

வெண்ணிக்குயத்தியார், சோழநாட்டு அரியணையில், கரிகாலன் என்ற பேரரசன் வீற்றிருந்த காலத்தே வாழ்க் தவர் ; கரிகாலன் முன்னேர் வரலாற்றையும், சிறப்பையும் நன்குணர்ந்தவர். ஆண்டில் அவ்வப்போது வீசும் காற்றின் தன்மையை உணர்ந்து, மாறி மாறி வீசும் அதன் இயல்பை உணர்ந்து, அதற்கு ஏற்ப, கப்பல்களைப் பிற நாட்டிற்குக் கொண்டுசெல்வதும், பிறநாட்டினின் லும் கொண்டுவருவதும் ஆய தொழில்களை அந்தக் காலத்தி லேயே மேற்கொண்டவர் கரிகாலன் முன்னேர்; பழங் தமிழர். வெண்ணிக்குயத்தியார். இதை உணர்ந்து கூறி

கரிகாலனுக்கும், சோமான்-பெருஞ்சேரலாதனுக்கும் புலவர் ஊராகிய வெண்ணி அருகே பெரும் போர் நடக் தது; அதனுல் அவ்விடம் வெண்ணிப் பறத்தலை என்று