பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பெண்பாற் புலவர்கள்

தொடங்கிவிட்டது ; அவனும் பரவிப் பாழாவதைப் பார்க் கிருன். ஆனால், பரவிப் பாழாவதைக் கையால் தடுக்கவோ, பிறர்க்கு அறிவிக்கவோ அவனுல் முடியவில்லை ; இந்தக் காட்சியைக் காட்டிவிட்டு, அக் கையில்லா ஊமை காக்கும் வெண்ணெய் போன்றது என் காமநோய் என்று கூறினன் ; இதல்ை, வெண்ணெய் உருகிப் பரந்து ஒடுவதைப் பார்ப் பது தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத கையில் ஊமை யைப்போல், காதல் நோய் பெருகி வருத்துவதைப் பார்த் துக்கொண்டிருப்பது தவிர, அதைத் தடுத்துக் கொள் வதோ உன்னைப்போன்ற நண்பர்களுக்கு உணர்த்தி வழி தேடுவதோ என்னுல் முடியவில்லை; யாது செய்வேன் யான்?’ என்று தன்கிலே விளக்கியவாறு காண்க.

இடிக்கும் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினே நன்று மன்தில்ல ; ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பாங்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.”

(குறுக் இ.அ)

வெள்ளிவீதியார் பாடல்கள் இது போன்ற உவமைக ளாலும், மணம் பேசவரும் பெரியவர்கள், கையில் தடியும், தலையில் துணியும் உடையாய் வருவர்; அக்காலத்தே தமிழகம் பல நாடுகளாகவும், நாடு பல ஊர்களாகவும், ஊர் பல குடிகளாகவும் பகுக்கப்பட்டு இருந்தது என்பன போன்ற செய்திகளாலும் சிறந்து விளங்குகின்றன.