பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. வெறிபாடிய காமக்கண்ணியார்

இவர் இயற்பெயர் காமக்கண்ணியார்; இது காமாட்சி என்ற வடசொல்லின் தமிழாக்கம். பாடிய பாட்டின் சிறப்பிற்கு ஏற்பப் பெயர் தருவது பண்டையோர் வழக்கம்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, கோடைபாடிய பெரும் பூதன் என்ற பெயர்களைக் காண்க. இவர், வெறியாடலை விளங்கப் பாடிய காரணத்தால், வெறிபாடிய காமக்கண்ணி யார் என்று அழைக்கப்பெற்ருர்,

ஒரு பெண், ஆண்மகன் ஒருவனேடு காதல்கொண்டு வாழ்கிருள்; அவர்கள் உறவினே அவள் பெற்ருேர் அறி. யார் ; இடையே, அவன், அவளிடத்தே வருவது சில கார ணத்தால் தடைப்படுகிறது ; அதனல், அவள் தாங்காத் துயர்கொள்ளுகிருள் ; கவலைமிகவே உடல்தளர்ந்து நோயுற் முள்போல் ஆகிருள். தன் மகளின் கிலேயைத் தாய் நோக்குகிருள். ஐயோ! என் மகள் இவ்வாறு தேய்ந்து போகிருளே எனத் தேம்புகிருள் ஊரில் உள்ள சில முதிய பெண்களிடத்தே தன் குறை கூறிப் புலம்புகிருள் ; அவர்கள் கூறியவாறே, குறி கூறுவாளே அழைத்துக் கேட் கிருள்; அவள் முறத்தில் நெல்லைப் பரப்பிப் பார்த்தும், கழற்கொடிக்காயை எண்ணிப் பார்த்தும், இது தெய்வக் குற்றம்; முருகனுக்கு வழிபாடு செய்; எல்லாம் நன்மை யாக முடியும்,” என்று கூறிச்சென்ருள். உடனே தாய், வீட்டைத் துய்மைப்படுத்தி அணிசெய்தாள்; ஊரில் உள்ள இசைக்கருவிகள் எல்லாம் அவள் வீட்டு வாயிலில் முழங்கின; வேலனை அழைத்து வந்தாள் ; வேலன் என் பவன், கையில் வேலேந்திக் கடவுள் ஏறி ஆடும் பூசாரி; வந்த வேலன், கையில் காப்புக் கட்டிக்கொண்டான்; கழுத்தில் மாலே அணிந்து கொண்டான்; களத்தில் வேலை கட்டுச் சந்தனமும் மஞ்சளும் தெளித்து மாலை சூட்டி இன்; ஆட்டுக்கடா அறுத்துக்கொண்ட குருதிகலந்த அரி சியைப் பலியாகத் தாவினன்; பேதுாபம் காட்டினன்; மலே கள் எதிரொலிக்குமாறு வாய்விட்டுப் பாடி முருகனே