பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறிபாடிய காமக்கண்ணியார் 111

தணியாமையைக் கண்டால், இவ்வூர்ப் பெண்கள் சும்மா இரார் ; இவள் நோய்க் காரணம் வேறே என்று கொண்டு இல்லாததும், பொல்லாததும் கூறிப் பழிதுாற்றத் தொடங்கி விடுவர் ; அதை நான் எவ்வாறு தாங்கிக்கொள்வேன்? ஒருவேளை, வெறியாடல் கண்டு மகிழ்ந்த முருகவேள், என் நோய் தணிய அருள் புரிந்துவிட்டால், இவள் நோய் நம் உறவு இல்லாமலே தணிந்துவிட்டது ; ஆகவே இவள் நோய்க் காரணம், நம் பிரிவு அன்று ; வேறு யாதோ' என்று நம் தலைவர் எண்ணிவிட்டால், நான் எவ்வாறு உயிர் வாழ்வேன் ; வாழேன். இவ்வாறு தாய் செயல் கண்டு தலைமகள் அஞ்சுவதாக ஒரு செய்யுள் :

'ஆடிய பின்னும் வாடிய மேனி

பண்டையிற் சிறவா தாயின், இம்மறை .. அலரா காமையோ அரிதே; அஃதான்று அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிது’ எனக் கான்கெழு நாடன் கேட்பின் - யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே.”

தோழி என் உடல் மெலிதல் தலைவன் பிரிவால் நேர்ந்தது என்பதை அறியாது, ஊரில் உள்ள கிழங்கள் கூறியதைக்கொண்டு, தாய் வெறியாடத் தொடங்கினுள் ; வெறியாடல் நிகழ்ந்துகொண்டிருக்கும் அன்று இரவு, யானையைப் பிடிக்க பாயும்புலி, பதுங்கிப் பதுங்கிச் செல் வதேபோல், நம் ஊர்க்காவலர் அறியாவண்ணம் ஒளிந்து ஒளிந்து நம் தலைவனும் அங்கே வந்துசேர்ந்தார். அவர் வரவினேக்கண்ட நான், வெறியாடுகளத்தின் நீங்கித் தலை வர் இருந்த இடஞ்சென்று மகிழ்ந்து மீண்டேன்; அதனுல் என் நோய் நீங்கிற்று; இவ்வாறு தலைவன் வர வால் என் நோய் நீங்கியதை அறியமாட்டாமல், தன்னல் நீங்கிற்று என்று கூறினன் வேலன்; இவ் வேலன் அறியாமை கண்டு சிரித்துச் சிரித்து என் வயிறெல்லாம் புண்ணுயிற்று,” என்று தலைவி கூறியதாக மற்ருெரு செய்