பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளுர் நன்முல்லையார் 7

பங்கனி ; இக் காட்சியையும் காணுகின்ருர் முல்லையார் ; ஊரில்கண்ட பொற்காசு ஏந்திய பொற்கொல்லன் கையின் காட்சிக்கும், இக் காட்சிக்கும் உள்ள ஒற்றுமையை உணர் கிருர்; அவர் உள்ளம் அவ் வொப்புமையில் ஊறிவிடு கிறது ; கிளிவாய் வேம்பிற்குப் பெர்ற்கொல்லன் கைப் பொற்காசை ஒப்புமை கூறியும் உள்ளார்;

இன்ளே, வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம், புதுநாண் நுழைப்பான் எதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல வொருகாசு எய்க்கும்.” (குறுக் : சுஎ)

காணும் காட்சிகளே எவ்வளவு கருத்துான்றிக் கவ னித்துள்ளார் என்பதை உணருங்கள்!

தரையோடு தசையாகப் படர்ந்திருக்கும் செடி வகை களில் நெருஞ்சியும் ஒன்று ; சிறுமழை பெய்தவுடனே தளிர்த்துப் பூக்கத் தொடங்கிவிடும்; பூக்கள் மிகவும் சிறியதாய், மஞ்சள் நிறமுடையதாய் நெருங்கப் பூத்திருக் கும் ; அக்காட்சி கண்டோர் மனதை மகிழ்விக்கும்; இவ் வழகிய காட்சி சின்னுள் வரையிலுந்தான் ; பின்னர், அப் பூக்கள் காயாக மாறத்தொடங்கும்; அக் காய்கள் முற்றின் முள்ளாக மாறும்; அங்கிலேயில், அது, தன்னே மிதிப்பார் கால்களையேயன்றித் தன் அண்மையில் வருவார் கால்களேயும் தைத்துத் துன்புறுத்தும். நெருஞ்சியின் இவ்வியல்பை நன்கு உணர்ந்தவர் நம் நன்முல்லையார் ; தொடக்கத்தில், கண்ணிற்கு விருந்தளித்துக் கடைசியில் காலிற்குக் கடுந்துயர் அளிக்கும் நெருஞ்சியின் இக்கொடுஞ் செயலே உலகத்தார்க்கு உணர்த்த எண்ணினர்.

ஒரு தலைவி, ஒரு தலைவனே மணந்து வாழ்ந்துவந்தாள்; தொடக்கத்தில் அவன் அவளிடத்தில் அன்பு மிகக்கொண்டு வாழ்ந்துவந்தான் ; அதனுல் அவள் மிகவும் மகிழ்ந்து வாழ்ந்தாள் ; இவ்வின்ப வாழ்க்கை சிலநாள் நடைபெற் றது ; அவன், அவள்பால் கொண்டிருந்த அன்பு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கிற்று; அவளே மறந்த