பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. ஆதிமந்தியார்

காவிரியாற்றின் இரு கரைகளிலும் வாழ்ந்த சோழ நாட்டு மக்கள், அவ்யாற்றில் புதுவெள்ளம் வரும்பொழுது புனல்விழாக் கொண்டாடி மகிழ்வர், விழா நடைபெறு மன்று ஆற்றலும் ஆண்மையும் மிக்க இளைஞர் பலர் அவ் யாற்றுநீரில் குதித்து எதிர்த்து நீந்தி ஆண்மைதோன்ற ஆடி மகிழ்வர். அவர்கள் அவ்வாறு ஆடி மகிழ்வதை அங் நாட்டு அரசன்முதல் அவ்வூர் மக்கள் அனைவரும், ஆற்றின் கரைக்கண் அமைந்த அரண்மிக்க அழகிய இடங்களி லிருந்து கண்டு மகிழ்வர்; இவ்வாறு புனல்விழா நடை பெறும் இடங்களிலொன்று கழார்ப்பெருந்துறை. அது கடற்கரைக்கு அண்மையிலுள்ளது; காவிரிப்பூம்பட்டி னத்திற்கு நான்கு அல்லது ஐந்துகல் தூரத்தில் இருப்பது. காவிரியாறு அவ்வூரருகே கிழக்கு நோக்கி ஒடும். அது, ஆற்று வெள்ளம் கரைகளே மோதி அழிக்கும் ஆற்றலோடு பாயும் இடம், ஆற்றுப்புனல் மோதி மோதி அழிப்பினும், அழிவுருமல் வாலுற வளர்ந்த மருதமரங்கள் கிறைந்தது அத்துறை. அங்கே நடைபெறும் புனல்விழாவின, அர சர்களும் வந்து காணுவர். அவ்வளவு சிறப்புடையது! விழா நடைபெறும்பொழுது முழவொலியும் வேறு பிற ஆரவாரங்களும் அங்கே நீங்காமல் ஒலிக்கும். இவ்வாறு ஆண்டுதோறும் நிகழும் அப்புனல் விழா

இவ்வாறு ஆண்டுதோறும் கிகழும் அப்புனல் விழா வில் ஒராண்டு விழாவின்போது, அப்பொழுது சோழ காட்டை ஆண்டிருந்த கரியாற் பெருவளத்தான் தன் சுற்றம் சூழ்ந்துவர, விழாக்காணக் கழார்ப் பெருந்துறைக்கு வந்திருந்தான். அரசனேடு வந்து ஆற்றில்வரும் புதுப் புனலையும் அதில் குதித்து ஆடித் திளேக்கும் அங்காட்டு இளைஞர்களையும் கண்டு நின்முேருள் அத்தி என்பானும் ஒருவன். அத்தி, அரசன் மைத்துனன்; மன்னன் கரிகால் வளவன் மகள் ஆதிமந்தியாரின் ஆருயிர்க் கணவன்; வஞ்சியைத் தலைநகராகக்கொண்ட சேரநாட்டுத் தலைவன் ;