பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிமந்தியார் 11

தொழிலில்வல்ல அத்தி அதை அறிந்திருப்பன் என்று எண்ணினர் ஆதிமந்தியார். ஆகவே ஆற்றின் இருகரையி லும் இருக்கும் நாடுகளிலும், ஊர்களிலும் சென்று அவனத் தேடுவாராயினர். அவ்வூர்களிலும் நடைபெறு கிறது இப் புனல்விழா: ஆடவரும் மகளிரும், மற்போர் விளையாட்டும், துணங்கைக் கூத்தும் ஆடி மகிழ்கின்றனர். அவர்களே அணுகி, உங்களைப்போல் ஆடல் தொழில் வல்லான் என் கணவன். அவன் பெயர் அத்தி. உங்களைப் போல் ஆடி மகிழும் இளமைப்பருவம் உடையேன் யானும். என் உடலும், உயிரும் மெலிந்து வருந்தப் புனலாட்டு விழாவிலே மறைந்துபோயினுன் அவன். உங்களில் யாரேனும் அவனைக் கண்டிரோ? என்று கேட்டுக் கேட்டு ஆதிமந்தியார் மனம் அலுத்துப்போனர். அவன் ஆடிய இடத்தினின்றும், பலநாடு பல ஊர்வரை தேடியும் அவளேக் காணமாட்டாமையால், ஆதிமந்தியார் அறிவு திரிந்தது. மதி மருண்டது; அத்தியின் ஊரும் பேரும் உருவும் கூறி, அவனேக் கண்டீரோ?' என எதிர் வருவார் யாரையும் கேட்டு ஏங்குவாராயினர். அவர் முயற்சி வீண் போகவில்லை. இறுதியில் கடற்கரை யருகே, ஆற்றுப் புனலால் அல்லலுற்று மாழ்க இருந்த அவனே, மருதி என்னும் கல்லாள் ஒருத்தி கண்டு, கடலுள் புகுந்து, கடிது முயன்று கரைசேர்த்துக் காத்து ஆதிமந்தியார்பால் ஒப்ப டைத்தார். ஆனல், அங்கோ அம் முயற்சியில் அம் மருதியார் கடலலைகளால் இழுப்புண்டு ஈறிலாப் புகழ் பெற்ருர். - -

ஆதிமந்தியாரின் புலமைச் சிறப்பைப் புலப்படுத்தும் அழகிய பாடல் ஒன்று குறுந்தொகைக்கண் உளது. இனத் தாலும், குணத்தாலும் ஒத்த ஒரு தலைவனும் ஒரு தலைவி யும் காதல்கொண்டு, களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகினர். அக் களவொழுக்கத்தை, அவர் இருவர் ஒழிய அய்லார் யாரும் அறியார் தலைமகள் உயிர்த்தோழியும் உணர்த்திலள். அவர்கள் தம் இவ் அன்புவாழ்க்கைக்கு இடையூறு ஒன்றுவரக் காத்திருந்தது. மனப்பருவம்