பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பெண்பாற் புலவர்கள்

எய்தினள் தலைவி ; ஆகவே, தாயும் தந்தையும் அவளுக்கு மணஞ் செய்துவைக்க்த் துணிந்தனர். அவளே மணம்பேச யாரோ சில சான்ருேர்களும் வந்திருந்தனர் ; அஃதறிந்தாள் தலைவி ; விரும்பி மேற்கொள்ளும் தலைவன் ஒருவன் பால் தன் உள்ளம் சென்றுளது என்பதைத் தன் தாயும் தந்தை யும் அறியார் ஆதலின், அவர், வந்த சான்ருேர்க்கு ஒப்பு தல் அளிப்பினும் அளிப்பர் என அஞ்சினுள். தன் கள வொழுக்கைப் பிறர் அறியாவண்ணம் இதுவரை மறைத்து வந்ததேபோல் இனியும் மறைத்து வைப்பின் ஏதமாம் என எண்ணிள்ை. தன் அன்பிற்குரிய தோழியை அழைத் தாள். தோழி! என் வளை கழலுமாறு கைமெலியத் துயர் செய்தான் ஒருவன் உளன். அவனேர் தலைசிறந்த ஆண்மகன் ; குரிசில்; பீடும் பெருமையும் உடையோன் ; மாண்புறு குணம் பல நிறைந்து நம்மை மணத்தற்குரிய தகுதியிற் சிறந்தோன்; ஆடுகளம் சென்று ஆடி மகிழும் இயல்புடையான்; ஆகவே, யானும், அவ்வாடுகளஞ்சென்று ஆடி மகிழும் விருப்பமுடையேனுய், வீரர்கள் பலர் கூடி ஆடும் மற்போர் விழாக்களத்தும், மகளிர் கூடி ஆடும் துணங்கைக்கூத்தின் கண்ணும் தேடித்தேடிப் பார்த்தேன். எங்கும் அவனேக் காணேன். இதற்கு யான் என்செய். வேன் ?’ என்று கூறிக் கலங்கினுள்.

தோழி அறிவே உருவானவள்; தலைவி, தலைவனே "மாண்தக்கோன்’, 'பீடுகெழுகுரிசில்” எனப் புகழ்வ தாலும், அவனே மற்போர் விழாவிலும் துணங்கைக் கூத்தின்கண்ணும் தேடினேன் எனக் கூறுவதாலும், அவன் தன் வளை நெகிழ்த்தான் என அறிவிப்பதாலும், தலைவி, தக்கான் ஒருவன்பால் அன்புகொண்டுள்ளாள் என்பதையும், அத் தலைவன் ஆண்மையிற் சிறந்த வீரன் என்பதையும், துணங்கைக்கூத்தின் கண் அவன் கை கொடுக்க அவைேடு ஆடி அன்பு கொண்டுள்ளாள் தலைவி என்பதையும் அறிந்தாள் ; இந் நிலையில், அவன் பெற்ருேர், அவளே அயலார்க்கு மணம்செய்து கொடுக்க முடிவு செய்

வாராயின் அவள் வாழாள் ; இறந்துபோவாள். ஆதலின்,