பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிமந்தியார் 13

அவ் விருவர் தம் நட்புறவைத் தாய் தந்தையர்க்கு அறி வித்து, அயலார்க்கு மணஞ்செய்து கொடுப்பதைத் தடுத்து அத் தலைவனுக்கே மணம் நேருமாறு துணைபுரிதலே தன் தலையாய கடனம் என்று முடிவு செய்தாள்.

இவ்வாறு, தானும் தலைவனும் பெற்று மகிழும் கள வொழுக்கத்தைத் தன் தோழிக்கு அறிவிக்கும், அறத் தொடு சிற்றலாகிய துறையமைத்துப் பாடிய ஆதிமந்தி யாரின் அழகிய பாடல் இது:

' மள்ளர் குழிஇய விழவி னனும்,

மகளிர் தழிஇய துணங்கை யானும், யாண்டும் காணேன் மாண்தக் கோனே : யானும்ஒர் ஆடுகள மகளே என்கைக் கோடுஈர். இலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும்ஒர் ஆடுகள மகனே.” (குறுந் : க.க)

ஆதிமந்தியார் வரலாற்றைப் பாணரும், வெள்ளிவீதி யாரும் பாராட்டியதோடு, ஆதிமந்தியாரின் அருமைத் தந்தை கரிகாற் பெருவளத்தான் என்ற சோழ அரசன் எனவும், அவர் கணவனை ஆட்டனத்தி, வஞ்சிமா நகரைத் தலைநகராகக்கொண்ட சேர நாட்டான் எனவும், கற்புக்கடம்பூண்ட பொற்புடைத் தெய்வமாகிய கண்ணகி பாராட்டிய கற்புடை மகளிர் எழுவரில் ஆதிமந்தியாரும் ஒருவர் எனவும் இளங்கோவடிகளும் பாராட்டியுள்ளார். அஃது இதோ:

" மன்னன் கரிகால் வளவன் மகள், வஞ்சிக்கோன்

தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ !” என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைக் கழிஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதங்தாள.” (சிலப், உக: க.க-டு) ஆதிமந்தியார் பிறந்து மொழிபயின்ற பட்டினம்,

பூம்புகார்ப் பட்டினமே என்று கூறுவர் பட்டினத்துப்

பிள்ளையார்.

حجم معی ماهی است.