பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. ஒக்கூர் மாசாத்தியார்

இவர் இயற்பெயர் சாத்தியார்; இது சாத்தனர் என்ப தன் பெண்பாற் பெயராகும். சாத்தன் என்பது, ஐயஞர் என்ற கடவுட்பெயர். சத்தன், சாத்தி என்ற இப் பெயர் கள், இலக்கண மேற்கோட் பெயர்களாகப் பயில ஆளப்படு கின்றன ; சாத்தன் என்ற பெயர்கொண்ட புலவர்களும் பலர் உள்ளனர்; இதல்ை, அக் காலமக்கள் இப் பெயர்களைப் பெருவழக்காக மேற்கொண்டிருந்தனர் என்பது புலனுகும். இவர் பெயர்க்கு முன்வரும் ஒக்கூர், புலவர் பிறந்த ஊர் போலும்; ஆல்ை, அது யாண்டுளது என்பது அறியக்கூட வில்லை; இவர் பிறந்த ஒக்கூரிலேயே, இவர் பெயர்கொண்ட ஆண்பாற் புலவரும் ஒருவர் இருந்தனர்: ஒக்கூர் மாசாத்த ர்ை. இவ் விருவரும் உறவுடையவராகவும் இருத்தல் கூடும். ஆணுல், அவர் உறவு, எத்தகைய உறவு என் பதையோ, அவர் உறவுடையவர் என்பது உண்மைதான் என்பதையோ உறுதிசெய்யும் சான்று ஒன்றுமில்லை,

ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல்களில் நமக்குக் , கிடைத்தவை எட்டு. அவற்றுள் ஒன்று புறத்துறை கழு விய பாடல்: எனைய எழும் அகத்துறைக் கருத்துக்கள் கொண்டவை. அவர் பாடிய பாக்கள் எல்லாவற்றுள்ளும், தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் சிறப்பளித்துத் தனக்கும் புகழ் அளித்த பெரும்பாட்டு, புறநானூற்றில் காணப்படும்

.பாட்டே

தமிழ்நாட்டுச் சிற்றுார்த் தெருவொன்றில் நடந்த நிகழ்ச்சியிது ; காடு காவலுக்கான டோர் கடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம்; காலேநேரம் , ஊர் நடுவே அமைக் திருக்கும் மன்றத்தே உள்ள போர்ப்பறை ஒலிக்கத் தொடங்கிவிட்டது ; அதைக் கேட்டாள் ஒரு கிழவி; நாடு காவலுக்கு சம் தொண்டும் இருக்கவேண்டுமே; நம் குடியி

  • ஒக்கூர் என்னும் ஊர் பாண்டிகாட்டில் சிவகங்கைக்கு வட பால் ஆறுகல் தொலைவில் ஒன்று இருக்கின்றது. அதுவே போலும்! -