பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெண்பாற் புலவர்கள்

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் எங்கோ ஒரு பகுதியிலிருந்த சிற்றார்த் தெருவொன்றில் நிகழ்ந்த இங்கிகழ்ச்சியைத் தமிழர்கள் தமிழகம் உள்ள வரையிலும் மறவாதிருக்கச்செய்த மாண்பு மாசாத்தி யார்க்கே உரித்து. -

' கெடுக சிந்தை கடிதிவள் துணிவே ,

மூதில் மகளிர் ஆதல் தகுமே : மேளுள் உற்ற செருவிற்கு இவள்தன்னே யானே எறிந்து களத்தொழிந் தனனே : நெருகல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப் பட்டனனே : இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே.”

(புறம்: உ.எக)

வீரச்சுவையை விளங்கப் பாடிய மாசாத்தியார், இன் பச்சுவை சொட்டும் அகப்பாடல் சிலவும் பாடியுள்ளார் : பொருள் கருதிப் பிரிந்துசென்ற கணவன் கினேவாகவே இருக்கிருள் ஒருத்தி , ஒருநாள் மாலைக்காலத்தே, அவளும் அவள் தோழியும் உட்கார்த்து பேசிக்கொண்டிருக்கிருர்கள். அந்நேரத்தில், எங்கிருந்தோ வந்த மணியோசையைக் கேட்டாள் தலைவி. மணியோசை, காலையில் சென்று காட்டில் மேய்ந்து மாலையில் வீடுதிரும்பும் ஆனிரைகளின் கழுத்தில் கட்டிய மணிகளினின்றும் வந்திருக்கும்; அல் லது, காவலர் புடைசூழத் திரும்பிவரும் கணவன் ஏறி வரும் தேரில்கட்டிய மணிகளினின்றும் வந்திருக்கும். ஆகவே, அவளால் ஒசையைக்கண்டு துணிய முடியவில்லை. மணியோசை கேட்கிறது என்ருல், அது மிகச் சேய்மையி லிருந்து வந்திருத்தல் இயலாது; அண்மையிலிருந்தே வந்திருத்தல் வேண்டும்; சிறிதுநேரம் கழித்தால் உண்மை விளங்கிவிடும்; ஆல்ை, அதுவரை காத்திருக்கவிடவில்லை