பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெண்பாற் புலவர்கள்

நிற்காக வழக்கமாய் உட்காரும் மரக்கிளேயில் இருந்து காத்திருப்பதையும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார் (நற் : உஅச.) இவர் பாடல்கள் எல்லாம் குளிர்காலக் கொடுமையை விளக்குவனவாகவே உள்ளன. வாடைக் காற்று வீசும் பனிக்காலக் கொடுமையை விளக்கிக் கூறும் இவர் பாடல் களைப் படிப்பவர் ஒவ்வொருவரும், அவ்வாடையின் கொடு மையால் தாமும் தாக்குறுவதுபோன்ற உணர்ச்சியினைப் பெறுவர்; அவ்வளவு துண்மையாக, அப்பனிகால இயல்பை விரித்துரைத்துள்ளார்; கண்ணிரில் வாழும் தாமரையை யும் கருக்கும் பனி, மலையும் நடுங்கும் குளிர் என ஒர் இடத்தில் கூறியுள்ளார்.

  • முளரி கரியும் முன்பணிப் பானுள்

குன்றுநெகிழ்ப் பன்ன குளிர் ” (அகம் : க.சு.க.) நகர்க்காவலர் நள்ளிரவிலும் உறங்குவதொழிந்து, நாழிகை எண்ணுவாாய் விழித்திருப்பதே போல், தலைவ னேப் பிரிந்து தனித்திருக்கும் தலைவியும் துயில் ஒழிந்து துயர் உற்ருள் எனப்பாடி நகர்க்காவலர் தம் நல்லியல்பினே யும் வெளுக்கும் தொழில்வல்ல வண்ணுத்தி கஞ்சியில் தோய்த்து ஒருமுறை தப்பிவிட்டுக் கண்ணிரிற் போட்ட வெள்ளாடை சிறிதே முறுக்கு நெகிழ்ந்து தோன்றுவது போல் பச்சிலைகட்கிடையே வெண்ணிறப் பகன்றை மலரும் எனப்பாடி வண்ணுர் தம் வெளுக்கும் தொழில் வன்மை யினேயும் வாயாரப் பாடியுள்ளார்:

" நள்ளென் யாமத்து ஐயெனக் கரையும் அஞ்சுவரு பொழுதி னுைம் என்கண் துஞ்சா வாழி கோழி காவலர் கணக்காய் வகையின் வருந்திஎன் செஞ்சபுண் ணுற்ற விழுமத் தானே.” (குறுங் : உசுக.) 'நலத்தகைப் புலத்தி பசைகோய்க் கெடுத்துத்

தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும் பேரி?லப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ.? - (குறுங் : கூகட0.)