பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. காக்கைபாடினியார் நச்செள்ளையார்

பெரும்பாலான தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்டு அவர்கள் உள்ளத்தில் என்றும் நீங்காது குடிகொண் டிருக்கும் கல்லிசைப் புலமை மெல்லியலார் ஒரு சிலருள், காக்கைபாடினியார் நச்செள்ளையாரும் ஒருவராவர். பண் டைத் தமிழர்களின் மறக்குடி மாண்பைப் படம் பிடித்துக் காட்டும் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றே, அவருக்கு அத்தகைய பெரும்புகழை அளிக்கின்றது.

தமிழ்நாட்டுச் சிற்றார் ஒன்றில் ஒரு வீட்டின் வெளியே கிழவிபொருத்தி கின்றுகொண்டிருக்கிருள்; தளர்ந்த நரம்புகள்; வற்றிய உடல்; நாம்புகளெல்லாம் மேலே எழுந்து நன்கு தோன்றுகின்றன; இடையோ மிகவும் சிறுத்துக் காணப்படுகிறது; அவளுக்கு அவ்வளவு முதிர்ந்த ஆண்டு; அங்கே யாரையோ வெகு ஆவலோடு எதிர்நோக்கி நிற்கிருள். சிறிது நேரத்திற்கெல்லாம், வீரர் பலர் வெற்றிமுழக்கத்தோடு வீடு திரும்புவதைக் கண்டாள்; அவர்கள் ஒவ்வொருவரையும் உற்று நோக்கிக் கொண்டே வந்தாள்; அவள் தேடும் ஆள் அவர்களோடு வருவதைக் காணவில்லை; அவள் அச்சமும் ஆவலும் மிகுதிப்பட்டன; அவ் வீரருள் ஒருவனே அழைத்தாள்; * அப்பா காலையில் உங்களோடு களம்நோக்கி வந்தானே என் மகன்; அவன் எங்கே? எனக்கிருப்பவன் அவன் ஒரு மகன்; மேலும் ஆண்டில் உங்களைக் காட்டிலும் இளைஞன் ; அவன் உங்களோடு வரக் காணுேமே ஏன்? களத்தில் அவனேக் கண்டாயா?” என்றெல்லாம் கேட்டாள். பாட்டி அவன: பகைவர் படையைக் கண்டவுடனே அஞ்சி ஒடிவிட்டான்' என்று கூறி அவ் வீமன் அப்பாற் சென்ருன்,

அவ் வீரன் கூறியதை அவள் நம்பவில்லை; நம்ப மறுத்தது அவள் உள்ளம்; மேலும் பல வீரரை வினவி ள்ை; அவர்களும் அவ்வாறே கூறினர்கள். ' என் மகன தோற்முேடிப் போனுன்; உண்மையாயிருக்குமா? என்