பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெண்பாற் புலவர்கள்

இவ்வாறு காக்கை கரைதலினல் கிடைத்த சிறப் பைப் பாராட்டிப் பாடியதினலேயே காக்கை பாடினியார் என்ற சிறப்புப் பெயர் அவருக்குக் கிடைத்தது. காக்கை பாடினியார் என்ற இப் பெயர் பிற புலவர்களுக்கும் வழங் கப்பட்டுள்ளது ; இலக்கண ஆசிரியர்கள் வரிசையில் பெருங்காக்கை பாடினியார், சிறுகாக்கை பாடினியார் என்ற இருவர் இடம் பெற்றுள்ளனர்.

நச்செள்ளையாரால் பாராட்டப்பெற்ற அரசன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்பவன்; சோர் குடியில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற பேரரசன் ஒரு வன் இருந்தான்; அவனுக்கு மனைவியர் இருவர் ; ஒருத்தி சோழன் மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை ; மற் ருெருத்தி, வேளாவிக்கோமான் பதுமன் என்பவன் மகள் ; வேளிர்குடியிலே வந்த இப் பதுமன் மகளுக்கும், நெடுஞ் சேரலாதனுக்கும் பிறந்த ஆண்மக்கள் இருவர் ; ஒருவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்; மற்ருெருவன், கச் செள்ளையாரால் பாராட்டப்பெற்ற ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் அவன் நாட்டிற்கு அண்மையில் தண்டாரணியம் என்ருேர் பெருங்காடு இருந்தது. அக்காட்டில் வாழ்ந் திருந்த காட்டு மனிதர்கள், இவன் நாட்டினுள் புகுந்து, அங்குள்ள ஆட்டு மங்தைகளைக் கைப்பற்றிக்கொண்டு காட் டுள் மறைந்து விட்டனர் ; உடனே, சோலாதன் பெரும் படையுடன் அக் காட்டினுள் புகுந்து, அக் காட்டு மனிதரை வென்று, அவ்வாட்டுமங்தைகளே மீட்டுவந்து, தொண்டி நகருள் கொண்டு கிறுத்தின்ை; இவ்வரும்பெருஞ் செயலிேைலயே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனச் சிறப்பிக்கவும் பட்டான். .

இவ்வாடுகோட்பாட்டுச் சேரலாதனப் பத்துப் பாடல் களால் பாராட்டினர் நம் நச்செள்ளையார்; அப் பாடல்கள், பதிற்றுப்பத்தினுள் ஆரும்பத்து என்ற தலைப்பின்கீழ் வரி