பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெண்பாற் புலவர்கள்

கேட்டும் மகிழ்ந்திருக்கிருன். அவனுடைய இவ் வின்ப வேட்கையை அறிந்தனர் அவன் பகையரசர்கள்; அவன் மிகவும் மெல்லியன், எளியன் என்று எண்ணிவிட்டனர்; அப் பகைவர் அறியாமை கண்டு இரங்குகின்ருர் நம் புலவர். சேரலாதன் இன்பத்துறையில் ஈடுபாடுடையனே என்ரு அம் போர்க்களம் புகுந்தால் அவனே வெல்வார் யார்? அங்கே அவன் கண்வலைப்பட்டுப் பிழைத்தார் எவரும் இலரே எமன் விரித்த வலையில் வீழ்ந்தவர் பிழைப்பது எவ்வாறு இயலாதோ, அவ்வாறே இவன் பார்வையிற் பட்டவரும் பிழையாரே! போர்க்களத்தில் இவன் பார்வை ஒருவர்மீது வீழ்ந்தது என்ருல், அவர்மீது எமன் வலை வீசிவிட்டான் என்றே பொருள்; அங்கே அவ்வளவு கொடியவனுயிற்றே சேரலாதன் ; அத்தகையானே எளியன் என்று எண்ணுகின்றனரே அவன் பகைவர்; அந்தோ ! என்ன பாவம் ' என்று ஏங்குகின்ருர்,

' விறலியர், பாடல் சான்று நீடி?ன யுறைதலின் வெள்வே லண்ணல் மெலியன் போன்மென உள்ளுவர் கொல்லோ கின் உணரா தோரே ! மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கடற்றம் வ?லவரித் தன்ன நோக்கலே,” (பதிற்று : நிக) ஆடவரும் மகளிரும் கைகோத்து ஆடும் துணங்கை என்ற ஆட்டத்தை ஆடிமகிழ்வர் அக்கால மக்கள்; அத் தகைய ஆட்டம் ஒன்றில் ஒரு பெண்ணிற்குக் கைகொடுத் தான் சேரலாதன் இதையறிந்தாள் அவன் மனைவி; சினங்கொண்டாள் ; கையில் பிடித்திருந்த குவளைமலரை அவன்மீது எறிய ஓங்கிள்ை; உடனே சோலாதன், அவளே அணுகி, மலரை வீசி எறியாதே; வாடிவிடும்; என் கையிற் கொடுத்துவிடு” என்று இருகை விரித்துக் கேட் டான். ஆனல், அவளோ அதை அவனிடத்தே கொடுக்க மறுத்து, “நீ யாரோ , கான் யாசோ ; கின்னிடத்தே என் மலரைக் கொடேன்” என்று கூறி வேறு இடம் சென்று விட்டாள் ; சோலாதன் செய்வதொன்றும் அறியாது அவள் சென்ற கிக்கையே நோக்கித் திகைத்து கி ற்கின்