பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெண்பாற் புல்வர்கள்

என்ற குறளுாைக்கு ஏற்ப, புலவர்க்கும் இரவலர்க்கும் கொடுத்துப் பழகிய அவன் கொடைச்சிறப்பையும், பிறர் பால் கையேந்திக் கேளாப் பெருமைக் குணத்தையும், பகைவர் கோட்டையைப் பாழாக்கும் பேராற்றலையும், தன் இல்லாள்பால் கொள்ளும் இன்பச் சிறப்பையும் ஒருங்கே உணர்த்தி விளங்கவைத்த புலவர்தம் சிறப்பை நோக் குங்கள்.

வேற்றார் செல்லவிரும்புகின்ருன் ஒருவன் ; ஊர்தி ஏறிச் செல்ல வசதியில்லாக்காலம் அது ; எங்கும் கடந்தே செல்லுதல் வேண்டும் ; அவன் செல்லவேண்டிய இடமோ நெடுந் தொலைவில் இருக்கிறது; பகலில் நடந்து சென்ருல் வெயிலின் வெப்பம் வாட்டும் என்று அஞ்சின்ை ; ஆகவே, பின் இரவில் எழுந்து நடக்கலானன்; செல்லும் தொழில் மேலுள்ள வேட்கை, அவனை விடியற்காலத்திலேயே விரட்டிவிட்டது; வெளியே வந்தான்; பனி மழைபோலக் கொட்டுவதைக் கண்டான்; குளிர் தாங்கமுடியவில்லை; திறந்தவெளியில் வாழ்ந்து பழகிய விலங்குகளும் குளிரால் உடல் குன்றித் துன்புறுகின்றன என்ருல் பணியால் அவன் படும் துயரை அளவிட்டுக் கூறல் இயலாது. என்ருலும், மீண்டு வீட்டிற்குச் சென்றுவிடாமல் வழிநடக்கின்ருன். விரைவில் இருள்போய்ப் பகல் வரும் என்ற நம்பிக்கை அவனே நடக்கவைக்கிறது; அந் நம்பிக்கையால் நடுங்கும் குளிரையும் தாங்கிக்கொண்டு வழிநடக்கிருன்; நடக்கிருன்! நடக்கிருன்! நடக்கிருன்; ஆல்ை இரவு குறைவதாகவோ, பகல் தோன்றுவதாகவோ தோன்றவில்லை ; அப்போது தான், அது மாசித்திங்கள் என்ற கினைப்பு வந்தது ; மாசித் திங்களில் பகல் குறைவு; இரவே நீண்டது என்பதை யுணர்கிருன்; உள்ளம் கலங்குகிறது; எனினும் உறுதி குலையாமல் குனிந்து கடந்துகொண்டே செல்கிருன்; நெடுந்தொலைவு சென்று கிமிர்ந்து நோக்கின்ை ; கிழக்கே ஞாயிறு தோன்றிவருவதைக் கண்டான்; அங் கிலையில் அவன் உள்ளம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் என்பதை உணர்த்தமுடியுமா? வழியில் வருந்தும் அவன் வாட்டம்