பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கைபாடினியார் நச்செள்ளையார் 35

திர ஞாயிறு தோன்றியதைப்போல, இரவலரின் இடும்பை தீரத் தோன்றினுன் சேரலாதன் என்று சிறப்பிக்கின்ருர் ம்ே புலவர். இவ் உவமையால், அவ்விரவல் மக்களின் நீண்டகால வறுமையின் கொடுமையும், அவர்களுக்குப் பொருள்களே வாரி வழங்கும் சேரலாதன் வள்ளன்மையும் ஒருங்கே தோன்றக் கூறியுள்ள சிறப்பை யுணர்க.

'பகல்ரீ டாகாது இரவுப்பொழுது பெருகி,

மாசி நின்ற மாகூர் திங்கள் பனிச்சுாம் படரும் பாண்மகன் உவப்பப் புல்லிருள் விடியப் புலம்புசேண் அகலப் பாயிருள் நீங்கப் பல்கதிர் பாப்பி ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்கு இாவன் மாக்கள் சிறுகுடி பெருக உலகம் தாங்கிய...... செல்வர் செல்வ (பதிற்று: நிக) செய்யுளில் உவமையினே மேற்கொள்வதில் நம் புலவர் புதுமுறையொன்றை மேற்கொண்டுள்ளார் ; மாரியன்ன வண்மை’ என்று ஒருவன் வள்ளல் தன்மைக்கு மழையை உவமை கூறுதல் மரபு; இதனல், வள்ளல் மேகம் போன்ற வன் என்று பொருள்படும்; இவ் உவமைகண்டு அஞ்சு கின்ருர் நச்செள்ளையார்; நீர் ஏக்திக் கருக்கொண்டு வந்த மேகம், மழையைப் பெய்தபின்பு வெண்ணிறம்பெற்று, மேலே எழுந்து சிறுசிறு பிசிராக மாறி மறைந்துவிடும்; இது மேகத்தின் இயல்பு; சேரலாதன் மேகத்தோடு ஒப்பானவன் என்று கூறினல், அவனும் அம் மேகத்தைப் போன்றே தேய்ந்து அழிந்துபோய் விடுவானே என அஞ்சு கின்ருர்; ஆகவே, அவ்வாறு 'அழியாது வாழ்க’ என்று வாழ்த்துகிருர். - -

"பெய்து புறந்தந்து பொங்க லாடி

விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்று அமுலியரோ பெரும!’ சேரலாதனுக்கு மேகத்தை உவமைகூறி, கம் உள்ளத் துய்மையையும் உணர்த்தும் அவர் புலமையின் சிறப்பே சிறப்பு 1. - ; : . . . . . :

२ ५ १: '