பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமக்கணிப் பசலையார் 37

முகவும், இந்தப் பருவத்தில் இத்தகைய இளவேனிற் காலத் தில்-என்னைத் தினியேவிட்டுப் பிரிந்துவிட்டார்; குயில் கள் கூடியிருந்து கூ, கூ'வெனக் கூவுவதைக் கேட்டு மகிழ்ந்தவர்தான் அவர்; கூ, கூ எனக் கூவும் குயில்கள் என்ன கூறுகின்றன தெரியுமா? மக்காள் செல்வம் கிலே யற்றது; சூதாடு கருவி உருட்டுந்தோறும் உருட்டுங்தோறும் ஒன்றுபோல் விழாமல், மாறி மாறி விழுவதேபோல், செல்வமும் ஒரே தன்மையாய் இராமல் குறைவதும் கிறை வதுமாய் மாறி மாறி வரும் ; ஆகவே, அச் செல்வத்தை மதித்து இன்பம் அனுபவிக்கவேண்டிய இளமைக் காலத் தில், ஒருவரைவிட்டு ஒருவர் பிரித்து போய்விடாதீர்கள் ; எங்களைப்போல் இணைந்து இருந்து இன்பம் நுகருங்கள், என்று கூறுகின்றன, என அன்று எனக்குக் கூறி மகிழ் வித்தவர் தான் அவர் ; கிலேயாக பொருளேத் தேடிப் பெற வேண்டும் என்று அவர் பிரிந்து போய்விட்டார்; பிரியேன்; பிரியின் உயிர்கரியேன் , அறன் அல்லன செய்தவனும் ஆவேன்’ என்று அன்று கூறியதை அழித்துப் பேசும் அறனிலி அல்லர் அவர் ; அறத்தை அறிந்தவர்; அறவழி நடப்பவர் ; இருந்தும், இன்று பிரிந்துவிட்டாரே!” என்று பெரிதும் துன்புற்ருள். பின்னர்ச் சிறிதுநேரம் அமைதி யாக இருந்து சிந்தித்தாள்; ' இளமை கில்லாது ; இளமை கழிந்தபின்னர் இன்பம நுகர்தலும் இயலாது; பொருளோ சகடக்கால்போல் மாறி மாறி வரும் இயல்புடையது. சேர்க்தோர் துயர்உறக் கான் பிரிந்து செல்லுதல் அறன் அன்று என்றெல்லாம் அறிந்தவர் பிரிந்தார் என்ருல், பிரிவின் இன்றியமையாமையினே உணர்ந்தே பிரிந்திருத்தல் வேண்டும். இருந்து வாழ்ந்தால் இருவரும் இன்பம் பெறு வோம் ; ஆனல் பொருள் பெறமுடியாது; பொருள் கில்லா இயல்புடையது என்ருலும், அது இல்லையாளுல் அற வோர்க்கு அளித்தல்முதலிய இல்லறக் கடமைகளை இனிது ஆற்றல் இயலாது.

' இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.” (திருக்குறள் : அக)