பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. குமுழிஞாழலார் நப்பசலையார்

குமுழி ஞாழலார் நப்பசலையார் என்ற இப்பெயர் இவருக்கு என் வந்தது என்பதை அறிந்துகொள்ள முடிய வில்லை; இவரின் பிறவாழ்க்கை வரலாறுகளையும் அறிந்து கொள்ள இயலவில்லை.

இவர் பாடிய பாட்டு ஒன்று ; அது அகநானூற்றில் நெய்தல்தினே குறித்து வந்துளது; இவர் மக்கள் உள்ளத் தையே அன்றி, பிற உயிர்களின் இயல்பையும் உள்ளவாறு உணர்ந்து உணர்த்தவல்லவர் என்பது அச் செய்யுளால் அறியப்படும்; ஆமை முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் முறையை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்; சூல்கொண்ட பெண் ஆமை, முட்டையிடும் காலம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்துகொண்டவுடனே, அந் நீர்நிலையைவிட்டு வெளிவந்து, கரையில் மேடான இடத்தைத் தேடிக் கண்டு, அங்கே குழியொன்று பறித்து அதில் முட்டைகளேயிட்டுக் குழியை மண்ணுல் மூடிப் புதைத்துவிட்டு, அவ்விடத்தை யும் அருகே வளர்ந்திருக்கும் அடம்பங் கொடிகளால் மறைத்து விட்டுச் சென்றுவிடும்; பின்னர், அம் முட்டைகள் குஞ்சு ஆகும்வரை அவ்விடத்தை விட்டக லாது ஆண் ஆமை காத்துக்கிடக்கும் என்று கூறுகிருர், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே நம் புலவர் அறிந்து கூறிய உண்மை இது.

“ஆமை இராக்காலங்களில் கிலத்திடைப் போதரும். சினேயினும் காலத்தில் ரோலும் பிறவற்ருலும் இடையூறு நிகழாததோர் தனியிடம் கண்டு, ஆங்கொரு குழிசெய்து, அதன்கண் தன் சினைகளை ஈன்று, மணலான் மெத்தென மூடிவிட்டுப் பின் வேருெரு வழியால் நீர்நிலையை அடை யும். சினேயினும் காலம் எய்திய வழியும், அக்காலத்து அது செய்தலால் தனக்காதல் தன்சினேகட்காதல் ஊறு நிகழும் என்பது தோன்றின், அது நிகழாமைக்குரிய காலம் வருமளவும் சினையினது நின்று, பெயர்த்துக் கரு வுயிர்க்கும் பெற்றிமையுடையது ; சினையின்ற ஆமை,