பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலத்துறை முற்றிய நலத்துறையில் நம் செக்தமிழ் நாடு, பண்டை நாளில் முதற்கண் நின்றது; அற்றை நாளில் கற்புக்கடம்பூண்ட .ெ பா ற் பு ைட மகளிரும், பொருக்கிய கல்வி திருந்திய மகளிருமாக இலங்கி,

காட்டைப் பொன்னுடாக்கிப் புகழுற்றனர்.

அக்கால மகளிர், பெண்மை யென்னும் உடலுக்கு உண்மை உயிராகத் திகழ்ந்திருந்தனர். அவர்தம், அன்பு அறம் மறம் தாய்மை காதல் முதலிய பண்புகளுக்குச் சங்கநூல்கள் சான்று தருகின்றன. அச் சங்க நூல்களி அம் இப் பெண்ணியலார் தந்த அரிய கருத்துக்கள் நிறைந்த பாமணிகள் மிளிர்கின்றன. அவைகளை ஆக்கிப் புகழுடல் பெற்று இன்றும் நம்மிடையே நிலவும் பண் டைத் தமிழ்ப்புலமைப் பெண்மணியார் இருபத்தறுவர் வரலாறே இந்நூல்.

இதனை நன்முறையில் அவர்கள்தம் பாவே துணை யாகக் கொண்டு நுணுகிச் சென்ருய்ந்து, உண்மையையே திரட்டிக் கொணர்ந்து வரலாருக-உண்மை நூலாகபுலவர் திரு. கா. கோவிந்தனவர்கள், தெளித்துத் தக் துள்ளார்கள்.

இந்நூலே உயரிய முறையில் பதித்து நம் தமிழக மாந்தர்க்குக் கூட்டுண்டு மகிழ, சங்கத் தமிழ்ப்புலவர் வரிசையில் ஐந்தாவதாக வெளியிட்டுள்ளோம். தமிழ் கூறு நல்லுலகமக்கள் இதனை ஏற்றுப் போற்றிக் கற்றுப் பயன் பல பெறுவார்களென நம்புகின்ருேம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.