பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. குறமகள் இளவெயினி

குறிஞ்சிநில மக்கள் எயினர் எனப்படுவர்; அவர்க ஞள் பெண் மகள் எயினி எனப்படுவாள் ஆதலாலும், குற மகள் என்றே இவர் அழைக்கப்படுதலாலும், எம்மோன்’எங்கள் தலைவன்-என்று பாராட்டிய ஏறைக்கோனே ' குறவர் பெருமகன் ” என்று இவரே அழைப்பதாலும் இவர் குறவர் குடியிற் பிறந்தவர் என்பது தெளிவு. கல்வி, செல்வம், நாகரிகம் இவற்ருல் இழிநிலையிலிருக்கும் இன் றைய குறவர்கிலையைப் பார்ப்பவர்க்கு, அக் குடியிற் பிறங் தவர் ஒருவர், அதிலும் பெண் ஒருவர் பெரும்புலவராய் விளங்கினர் என்பது அற்புதச் செயலாகவே தோன்றும். குறவர் குடியிலே பிறந்த இவர், மிகமிக இளமைக் காலத்தி லேயே புலமை பெற்றுப் பாடல் புனேயத் தொடங்கி விட்டார். ஆகவே இவர், குறமகள் இளவெயினி என அழைக் கப்பெற்ருர். .

குறமகள் இளவெயினி இனப்பற்று மிக்கவர் ; புலவர் பலர் கூடியிருந்த அவையொன்றில், தம்மால் பாராட்டப் பெறும் தங்கள்குலத் தலைவனுகிய ஏறைக்கோன் என்பா அக்கும், அப் புலவர்களால் பாராட்டப் பெறும் ஏனேய தலைவர்களுக்கும் உள்ள உயர்வு தாழ்வுகளே எடுத்துக் காட்டி, "எல்லா வகையாலும் எங்கள் தலைவன் ஏறைக் கோனே சிறப்புடையான் என்று காரணம் காட்டி உறுதி சய்துள்ளார். 'யாதும் ஊரே ; யாவரும் கேளிர்,” எனக் கொள்வதே புலவர் பண்பு ; அதற்கு மாருக, நீங்கள் ; உங்கள் தலைவர்கள் ; நான் ; என் தலைவன் எனப் பேதங் காணல், பெரும் புலவர்க்கு அழகு அல்ல என்ருலும், ஆண்டு இளமை, புலமையிலும் ஆற்றல் மிக்கது ஆகவே, இளமை, யுடையாராகிய இளனயினி, இனப்பற்று மிக்கு அவ்வாறு கூறினர்; இளமையால் இனவுணர்ச்சி கொண்டு, பிரிவினை காட்டிப் பாடினர் என்ருலும், அவர் புலமைச் சிறப்பு, அக் குறை மறைத்து அவரைப் பெரும்புலவர் வரிசையில் வைத்துப் பாராட்டியது. -