பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெண்பாற் புலவர்கள்

'கான முயல்எய்த அம்பினில் யானை -

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.” (திருக்குறள் எஎஉ) என்ற எண்ணம் அவன் உள்ளத்தே தோன்றுதல் வேண்டும். -

'அழியுநர்புறக்கொடை அயில்வே லோச்சாக்

கழிதறுகண்மை.”

யைக் காதலிக்க வேண்டும் அவன் ; அதுவே உண்மை வீசனுக்கு அழகாம்.

இம் முப்பெருங் குணங்களால் சிறந்தார் ஒருவர் எவர்க்கும் அஞ்ச வேண்டுவதில்லை ; எவர்க்கும் பணிந்து போக வேண்டுவதும் இல்லை ; எங்கும் அவர் பெருமித மாகவே வாழலாம்; அரசர் பலர் கூடிய அவையிலும் அவர் கிலே உயர்ந்தே கிற்கும் ; ஆகவே, அரசரும் மதிக்க வாழும் அப் பெருவாழ்வைப் பெறவே ஒவ்வொருவரும் முயன்று உழைத்தல் வேண்டும் -

ஏறைக்கோன், முன்னர்க் கூறிய முக்குணங்களேயும் பெற்ருேன் ஆகவே, அரசவைகண்டு அஞ்சாது பெருமை யோடு வாழ்ந்தான் என்று கூறியுள்ளார்.

' கமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,

பிறர்கை யறவு தான்கா ணுதலும் படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும் வேந்துடை அவையத்து ஒங்குபு நடத்தலும் நம்மோர்க்குத் தகுவன அல்ல ; எம்மோன் பெருங்கல் நாடன் எம் எறைக்குத் தகுமே. - - - (புற்ம் : கடுள)

இவ்வாறு தம் தலைவன் புகழ் பாடுவார்பால், உலக உயர்விற்கு ஒரு வழிகாட்டியாய் கின்று அறிவுரை கூறிய எயினியார்க்கு உலகம் ஈன்றி செலுத்துவது கடப்பாடா

கும.

ബണ്ടു.