பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங். குறமகள் குறிஎயினி

இவரும் குறவர் குடியிற் பிறந்த பெண்பாற் புலவரே என்று அவர் பெயர் அறிவிக்கும் வரலாறு தவிரப் பிற ஒன் அம் அறிய முடியவில்லை ; ஏறைக்கோனைப் பாடிய குற மகள் இளவெயினியாரே இவர்; இளமையில் ஏறைக்கோ சீனப் பாடியவராதலின் அங்கே அவர் இளவெயினி எனப் பட்டார் என்றும் தன், வாழ்நாளின் பிற்காலத்தே பாடிய நற்றிணைச் செய்யுளில், கின்குறிப்பெவனே தோழி! என் குறிப்பு’ என்ற முதலடியில் குறிப்பு என்ற சொல்லை அடுக்கிவைத்துப் பாடிய காரணத்தால் இவர் குறிப்பெயினி எனப்பட்டார் ; ஏடு எழுதினேர் அதைக் குறிஎயினி என மாற்றி யிருத்தலும் கூடும் என்றும் கொள்வர் சிலர். குற மகள் என்பதைக் குறிஞ்சி கிலத்து நன்மகள் என்று கொள்ளாது குறக்குடியிற் பிறந்த மகள் என்று கொள் வது பிழை எனக் கூறுவர் வேறு சிலர். குறமகள் குறி எயினி, குறமகள் இள எயினி என்பாரெல்லாம் குறவர்குடி மகளிரே என்பது குறமகள் என்ற சொல்லால் அன்றி, எயினி என்ற சொல்லாலேயே நன்கு உறுதி செய்யப்படும் என்பதை அவர் உணர்ந்திலர் போலும்.

குறவர் குடியிலே புலவரா? அக் குடிமகளிரில் இவ் வளவுபேர் புலமை பெற்றிருக்க முடியுமா? என்ற ஐய நெஞ்சத்தின் விளைவே இத்தகைய முடிவுகளெல்லாம். குறவர் குடியில் பெண்கள் பலர் புலமை பெற்றிருத்தலும் கூடும்; பேய்மகள் இளனயினி என மற்ருெரு புலவரும் இருப்பதே இதற்குச் சான்று. அவர்களே வேறு பிரித்துக் காண்பதற்காக, குறமகள் இளனயினி, பேய்மகள் இள எயினி , குறி எயினி, இள எயினி என அவர் பெயர்களுள் சில சொற் களே, அவர் பாடிய பாடல்களின் இயல்புக்கேற்ப மாற்றி யமைத்து வழங்கியுள்ளனர். ஆகவே, அவ் இளவெயினி யாரே, இக் குறி எயினியார் என்று கொள்வது சரியன்று ; புலவர் வால்ாறுகளே உணர்ந்துகொள்ளும் வழிவகையற்

றிருக்கும் நிலையில் பலரை ஒருவாக்குவது, ஒருவரைப்