பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. தாயங்கண்ணியார்

பெயரன்றிப் பிறிதொன்றும் அறிய முடியாத புலவர் வரிசையில் இவரும் ஒருவர். தாயங்கண்ணணுர் என்ற புலவர் ஒருவரும், எருக்காட்டுர்த் தாயங்கண்ணனர் என்ற புலவர் ஒருவரும் ஆக இரு புலவர்கள் புறநானூற்றினல் அறியப்படுகின்றனர். அவ்விருவரும் ஒருவரே எனக் கொண்டு, தாயங்கண்ணனர், தாயங்கண்ணியார் என்ற பெயர்களிடையே காணப்படும் ஒற்றுமையினேக் கண்டால், தாயங்கண்ணியார், அப் புலவரோடு யாதோ ஒரு வகையில் உறவுடையவரோ என எண்ணவும் கூடும். அஃது உறுதி யாகுமானல், நம் தாயங்கண்ணியாரும் எருக்காட்டுரில் வாழ்ந்தவரே என்பதும் உறுதியாகும்; எருக்காட்டுர், தஞ்சை மாவட்டத்தில், கன்னிலம் வட்டத்தில் காவால குடிக்குக் கீழ்த்திசையில் உள்ள ஒர் ஊர் என்றும், திருவா ரூர்க்குத் தென்மேற்கே மூன்று நாழிகை வழித் தாத்தில் உள்ளது என்றும் கூறுவர். காயம என்பது உரிமை என்று பொருள்படும்; அது அரசர்கள் வரி நீக்கி ஒருவ ருக்கு உரிமையாக்கும் கிலத்தையோ அல்லது ஊரையோ உணர்த்துவதாகும். இதனுல், நம் தாயங்கண்ணியார், எருக் காட்டுரைத் தாயமாகப் பெற்ற பெருமை மிக்க குடியோடு

தொடர்புடையவர் என்பதும் உறுதி செய்யப்படும்.

தாயங்கண்ணியார், கணவனே இழந்த கைம்பெண் களின் துயர் கிலேயைத் தெளிவாக எடுத்துக் காட்ட வல்லவர். r

கணவனும் மனேவியும் கூடி இல்லறம் ஆற்றிய பொழுது, ஆக்கிய சோறும் கறியும் மணக்கும் தாளிப்பு மணம், இரவலர் பலரை இழுத்துக் கொணர, அவர்கள் வீட்டுவாயில் என்றும் குறைவின்றிக் கூடியிருக்கும் சிறப்புடையது. வறுமையால் வாடிக் கண்ணிர் விட்டுக் கலங்கும் பலருடைய கண்ணிரை மாற்றிக் கருணை புரிந் தது அவ்வீட்டின் முன்னே அமைந்த பந்தல்; அவ்வளவு சிறப்புடைய வீடு இப்போது பொலிவிழந்து விட்டது;

பெ. பு-4 . .