பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெண்பாற் புலவர்கள்

கணவன் இறந்துவிட்டான் ; அவன் மனைவி, தலைமயிரை ரையும் கைவளையையும் இழந்து, அல்லி அரிசியாலான புல் அணவு உண்டு புலம்புகிருள் ; முன்னே பலர் கண்ணிரை மாற்றியது அவ்வீடு ; ஆல்ை இப்போது அவள் ஒருத்தி யின் கண்ணிரைக்கூட அதனல் மாற்ற முடியவில்லை; அறுசுவை அடிசில் வீடு நோக்கி வந்தவர் பலர்க்கும் அளித்த அவ்வீடு, அவள் ஒருக்திக்கு உணவளிக்க முடிய வில்லை; வனப்பும் வளமும் பெற்றிருந்த வீடு, அவள் கணவன் இறந்துவிட்டானுக, வாழ்வும் வளமும் இழந்து, அவளோடு கூடி வாடி வருந்துகிறது என்ற கருத்தமைந்த அவர் பாடல் இது.

' குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இாவலர்த் தடுத்த வாயிற் புரவலர் கண்ணிர்த் தடுத்த தண்ணறும் பக்தர்க் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவியோ டினியே புல்லென் றனையால் வளங்கெழு கிருநகர் வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலேப் புதல்வர் தங்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.”

- (புறம் : உடும்.)

மனைக்குரியோன் மாண்டானுக, மனே மாண்பிழந்து விட்டது எனக் கூறும் புலவர், மனே மாண்பிழத்தலாவது இரவலரை இனிதேற்று, இனியன அளித்து, அவர் கண்ணிசை மாற்ற மாட்டாமையே எனக் கூறுவது பாராட் டற்குரியதாம்.