பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெண்பாற் புலவர்கள்

இவ்வளவு சீரும் சிறப்புமாக வாழ்ந்த அவர்கள் வாழ்வும் பாழ்பட்டது ; தாழ்வுற்றது ; அவர்கள் தந்தை பாரி, பேரும் புகழும் பெருக வாழ்வதைக்கண்டு பொருமை காண்டனர், அப்போது தமிழ்நாட்டை யாண்டுவந்த சோ சோழ பாண்டியர் என்ற தமிழரசர்கள் மூவரும் ; பொருமை, பகையாக வளர்ந்தது; பாரியை அழித்துவிட முடிவு செய்தனர்; பெரும் படைகொண்டு பாரியை எதிர்த் தனர்; அவன் மலையை முற்றுகை செய்தனர்; முற்றுகை பல நாள் நீடித்தது ; என்ருலும் பாரியை வெல்ல அவர் களால் முடியவில்லை ; போர் செய்து அவனே அழிக்க முடியாது என்பதை யுணர்ந்த அவர்கள், அவனே வஞ்சனே யால் கொன்றனர் ; பாரிமகளிர் தங்தையை இழந்தனர் ; தந்தையைத் தொடர்ந்து தாயும் மாண்டாள்; பாரிமகளிர் பெற்ருேர் இழந்த பேதையர் ஆயினர்; தனியாய் கின்று தவிக்கும் அம் மகளிரை அவர்கள் தந்தையின் ஆருயிர் கண்பராகிய கபிலர், ஆறுதல் கூறித் தம்முடன் அழைத் துச் சென்ருர்,

பறம்புமலையை விட்டுப்பிரிந்து ஒரு திங்கள் ஆயிற்று ; ஒரு நாள் அவர்கள் மூவரும் ஒர் ஊரில் ஒரு குடிசை வீட்டில் தங்கியிருந்தார்கள் : அன்று முழு நிலா நாள் ; அவர்கள் அவ் வீட்டில் அமர்ந்திருக்கும்பொழுது, அவ் வீட்டை அடுத்துச் செல்லும் பெருவழி வழியாக உமணர்கள் என்னும் உப்பு:வணிகர் தம் உப்புவண்டிகளே வரிசையாக ஒட்டிக்கொண்டு சென்றனர். ஒழுங்காகச் செல்லும் அவ் வுப்புவண்டிகளைக் கண்டதுமே, அம்மகளிர் உள்ளம் மனக்கவலைமறந்த மகிழத்தொடங்கிற்று; இருந்த இடத்தைவிட்டு எழுந்து ஒடினர் ; வீட்டருகேயிருந்த குப்பையொன்றே உயர்ந்த இடமாகஇருப்பது உணர்ந்தனர்; அதன் மீது எறிகின்றனர்; உப்பு வண்டிகளை ஒன்று இரண்டு என எண்ணத் தொடங்கினர்.

இக் காட்சியைக் கண்டார் கபிலர்; கண்களில் நீர் விட்டுக் கலங்கினர்; வாழ்க்கையில் நிகழும் ஏற்றத்தாழ்வு களே எண்ணினர்; அவர் உள்ளம் உருகிற்று ; அம் மக